News October 13, 2025

கல்லூரி பேராசிரியர்கள் தொடர் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

image

ஏ யூ டி மற்றும் மோட்டார் அமைப்பின் பொதுச்செயலாளர்கள் சேவியர் செல்வகுமார், செந்தாமரை கண்ணன் ஆகியோர் இன்று நெல்லையில் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில்; கோரிக்கைகளை நிறைவேற்றி வலியுறுத்தி நாளை கருப்பு நிற உடை அணிந்து கல்லூரிகளில் வாயில் முழக்க ஆர்ப்பாட்டம் 15ஆம் தேதி கல்லூரி கல்வி இணை இயக்குனர் அலுவலகங்களில் காத்திருப்பு போராட்டம் 16ஆம் தேதி பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தெரிவித்துள்ளனர்.

Similar News

News October 14, 2025

மாவட்டத்தில் இரவு காவல் பணி அதிகரி விபரம்

image

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் உத்தரவின் படி நெல்லை மாவட்டத்தில் இன்று (அக்.13) இரவு முதல் நாளை காலை 6 மணி வரை காவல் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் பெயர் விபரம் காவல் சரகம் வாரியாக மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் கைபேசி எண்ணும் தரப்பட்டுள்ளது. காவல் உதவி தேவைப்படுபவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரியை தொடர்பு கொள்ளலாம்.

News October 14, 2025

நெல்லை: இரவு ரோந்து பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள்

image

திருநெல்வேலி மாநகர இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி பாளை டவுன் தச்சை ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும் உதவி ஆய்வாளர்களும், இன்று [அக்.13] இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். உதவி ஆணையர் சரவணன் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார். பொதுமக்கள் காவல் உதவிக்கு மேற்கண்ட தொலைபேசி நம்பரை தொடர்பு கொள்ளலாம்.

News October 13, 2025

2115 இடங்களில் சாதி அடையாளம் அழிப்பு – எஸ்பி தகவல்

image

எஸ்பி சிலம்பரசன் இன்று பத்ரிகையாளர்களுடன் கலந்துரையாடினார். அவர் கூறுகையில், கடந்தாண்டை விட இந்தாண்டு நெல்லையில் கொலை குற்றம் 20% குறைந்துள்ளது. சாதி பிரச்னையை தடுக்க தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறோம். இந்தாண்டு 21 போக்சோ வழக்கு பதியப்பட்டதில் 22 பேருக்கு தண்டனை வாங்கி கொடுத்துள்ளோம். இதுவரை 2115 இடங்களில் சாதி அடையாளங்கள் அழிக்கப்பட்டுள்ளது என்றார்.

error: Content is protected !!