News October 13, 2025
விஜய் நிச்சயம் பதில் சொல்ல வேண்டும்: TKS இளங்கோவன்

விஜய் ஏன் 7.5 மணி நேரம் தாமதமாக வந்தார் என்பதற்கு இன்னும் தவெக தரப்பில் பதில் அளிக்கவில்லை என டிகேஎஸ் இளங்கோவன் விமர்சித்துள்ளார். விஜய் சொன்ன நேரத்துக்கு கரூர் சென்றிருந்தால் அசம்பாவிதமே நடந்திருக்காது எனவும், 41 உயிர்கள் பறிபோனதற்கு முக்கிய காரணம் தவெகதான் என்றும் குற்றம்சாட்டியுள்ளார். தாமதத்திற்கான காரணம் குறித்து அவர் பதில் சொல்லும் வரை விடப்போவதில்லை எனவும் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
Similar News
News December 17, 2025
பொங்கல் பரிசு.. வெளியானது முக்கிய தகவல்

பொங்கல் தொகுப்புடன் ரொக்கப் பணமும் வழங்கப்படும் என்று எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில், கடந்த ஆண்டை போலவே ஜன.3 முதல் ரேஷன் கடை ஊழியர்கள் வீடு வீடாகச் சென்று, பொங்கல் பரிசுக்கான டோக்கன்களை வழங்குவார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதன்பின், ஜன.9-ம் தேதி முதல் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு ஆகியவை ரேஷன் கடைகளில் விநியோகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.
News December 17, 2025
வீட்டை கோயிலாக்கும் மார்கழி கோலங்கள்!

வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்ற வள்ளலாரின் ஜீவகாருண்ய தத்துவம், பச்சரிசி மாவில் போடும் கோலங்களால் உயிர்பெறுகிறது. எறும்புகளுக்கும், சிறு உயிர்களுக்கும் உணவளிக்கும் இந்த உன்னத அறத்தை மார்கழி மாதத்தில் பின்பற்றுவது கூடுதல் சிறப்பு. இதனால் வீட்டில் செல்வம், செழிப்பு பெருகும் என நம்பப்படுகிறது. அப்படியாக, மார்கழியில் போடக்கூடிய கோலங்களை போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். SWIPE செய்து பார்க்கவும்.
News December 17, 2025
3 மணி நேரம் 6 நிமிடங்கள்.. சரியான முடிவா?

இரண்டரை மணி நேர படங்களே Length ஜாஸ்தி என்ற விமர்சனத்தை பெறும் சூழலில், ஜனநாயகன் 3 மணி நேரம் 6 நிமிடங்கள் ஓடும் என சொல்லப்படுகிறது. 3 மணி நேரத்தை கடந்த Runtime கொண்ட புஷ்பா 2, அனிமல் படங்கள் வெற்றி பெற்றாலும், ஜனநாயகனுக்கு ரிஸ்க்தான் என்ற சினிமா விமர்சகர்கள் கூறுகின்றனர். நேற்று சென்சாருக்கு அனுப்பப்பட்ட படத்தின் Final Output ரெடியாகாத சூழலில், இதை கவனிப்பார்களா விஜய்யும், ஹெச். வினோத்தும்?


