News October 13, 2025
தமிழக மீனவர்கள் மீது கடற்கொள்ளையர் தாக்குதல்!

கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்கள் 21 பேர் மீது, இலங்கை கடற்கொள்ளையர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இலங்கை கடற்படையினர் ஒருபுறம், கடற்கொள்ளையர் மறுபுறம் என தினந்தோறும் தொல்லை கொடுப்பதாக மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். முன்னதாக, கடந்த வாரம் ராமேஸ்வரம் மீனவர்கள் 47 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்ததை கண்டித்து, அங்கு 3-வது நாளாக வேலைநிறுத்த போராட்டம் தொடர்கிறது.
Similar News
News December 9, 2025
காங். ஒன்றும் காளான் அல்ல: செல்வப்பெருந்தகை

காங்., தவெகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக நயினார் நாகேந்திரனும், திமுக கூட்டணியில் இருந்து காங்., வெளியேறும் என்று அண்ணாமலையும் கூறியிருந்தனர். இதுகுறித்து பேசிய செல்வப்பெருந்தகை, காங்., ஒன்றும் நேற்று முளைத்த காளான் அல்ல, 140 ஆண்டு கால பாரம்பரியம் கொண்ட கட்சி என்றார். கொல்லைப்புறமாக சென்று பேச வேண்டிய அவசியம் தங்களுக்கு இல்லை என்றும் பதிலடி கொடுத்துள்ளார்.
News December 9, 2025
திமுக அரசை தூக்கி அடிப்போம்: ஹெச்.ராஜா

திமுக அரசு இந்து விரோத அரசாக செயல்பட்டு வருகிறது என ஹெச்.ராஜா சாடியுள்ளார். வரும் தேர்தலில் முக்கிய சாராம்சமாக திருப்பரங்குன்றம் பிரச்னை தான் இருக்கும் என்ற அவர், இதன் மூலம் திமுக அரசை தூக்கி அடிப்போம் என தெரிவித்துள்ளார். அத்துடன், வரும் 12-ம் தேதிக்குள் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றப்பட வேண்டும் எனவும் கெடு விதித்துள்ளார்.
News December 9, 2025
செங்கோட்டையனின் அண்ணன் மகன் அதிமுகவில் இணைகிறார்

செங்கோட்டையனின் சொந்த அண்ணன் மகன் கே.கே.செல்வம் திமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். ஈரோடு திமுக வடக்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளராக இருந்த அவர் கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக திமுக தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது. இதனையடுத்து, அவர் மீண்டும் அதிமுகவில் இணைகிறேன் என்று அறிவித்துள்ளார். கோபியில் செங்கோட்டையனுக்கு எதிராக செல்வத்தை அதிமுக களமிறக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


