News October 13, 2025
காஞ்சிபுரம்: ஆதார் கார்டில் இதை செய்துவிட்டீர்களா?

காஞ்சிபுரம் மக்களே! உங்கள் ஆதார் கார்டுடன் Address Proof-ஐ இணைத்து விட்டீர்களா? இல்லையெனில், இந்த இணையத்தளத்தில் இணைத்துக் கொள்ளுங்கள். இதன் மூலம் உங்கள் ஆதார் சேவையை எளிதாகவும், வேகமாகவும் பெற முடியும். Address Proof-காக ரேஷன் கார்டு, பான் கார்டு, லைசன்ஸ், பாஸ்போர்ட், EB, கேஸ், குடிநீர் கட்டண ரசீது போன்றவற்றை பயன்படுத்தலாம். மேலும் தகவல்களுக்கு 1947 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க.
Similar News
News October 14, 2025
காஞ்சிபுரம்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

காஞ்சிபுரத்தில் இன்று (அக்.13 ) இரவு 10 மணி முதல் காலை 6:00 மணி வரை ரோந்து பணிக்கு காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர காரணத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசியின் வாயிலாக அல்லது 100 டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News October 13, 2025
காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் யோகிபாபு தரிசனம்

காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள சக்தி பீடங்களில் முதன்மையாக விளங்கும் அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவிலில் பிரபல காமெடி நடிகர் யோகி பாபு வருகை தந்து சாமி தரிசனம் செய்தார். நடிகருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் உற்சாக வரவேற்பும், சிறப்பு தீபாராதனை மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது, ஏராளமான ரசிகர்கள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
News October 13, 2025
காஞ்சிபுரத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் மூன்றாம் கட்ட முகாம்கள் நடைபெற்று வருகின்றன. இதில் நாளை (14.10.2025) காஞ்சிபுரம் மாநகராட்சி, குன்றத்தூர் நகராட்சி, திருப்பெரும்புதூர், வாலாஜாபாத் மற்றும் குன்றத்தூர் நகரப் பஞ்சாயத்து பகுதிகளில் முகாம்கள் நடைபெறவுள்ளன. பொதுமக்கள் தங்கள் குறைகளை ஆவணங்களுடன் மனுக்கள் அளிக்க மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.