News October 13, 2025
திமுக அரசுக்கு சவுக்கடி: எல்.முருகன்

கரூர் சம்பவத்தில், திமுக அரசுக்கு உச்சநீதிமன்றம் சரியான சவுக்கடி கொடுத்துள்ளதாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். இது குறித்த அவரது X பதிவில், கரூர் வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றியதும், ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் SIT அமைக்க உத்தரவிட்டிருப்பதும் வரவேற்கத்தக்கது என்று குறிப்பிட்டுள்ளார். விரைவில் கரூர் சம்பவத்தின் உண்மை வெளிவரும் என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.
Similar News
News October 13, 2025
தீபாவளி ஸ்பெஷல்: உதிராம அதிரசம் செய்ய இத பண்ணுங்க!

தீபாவளி ஸ்வீட்னாலே முதலில் நினைவுக்கு வருவது அதிரசம் தான். ஆனா, அதிரசம் செய்யும்போது சரியாகவே வராது. ஒன்னு உடைஞ்சுரும், இல்ல உதிரும். அத சரி செய்ய சில விஷயங்கள கவனிச்சா போதும். அது என்னென்ன? அதிரசம் செய்வது எப்படினு மேலே ஸ்வைப் பண்ணி பாருங்க…
News October 13, 2025
SPORTS ROUNDUP: டெஸ்டில் சிராஜ் அசத்தல் ரெக்கார்ட்

*ஜப்பான் ஸ்குவாஷ் ஓபன்: இந்திய வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா சாம்பியன்.
*2025-ம் ஆண்டில் அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை கைப்பற்றியவர்கள் பட்டியலில் முதல் இடம் பிடித்த சிராஜ்(35).
*பிஹார் ரஞ்சி அணிக்கு வைபவ் சூர்யவன்ஷி துணை கேப்டனாக நியமனம்.
*இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடர்: நியூசிலாந்து அணி அறிவிப்பு.
*வுஹான் ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் கோகோ காப்.
News October 13, 2025
ஒருநபர் ஆணைய விசாரணை நிறுத்திவைப்பு!

கரூர் விவகாரத்தில், ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் அமைக்கப்பட்ட ஒருநபர் ஆணைய விசாரணை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. விசாரணையில் இதுவரை திரட்டிய ஆதாரங்களை CBI-யிடம் ஒப்படைக்க உத்தரவிட்டுள்ள உச்சநீதிமன்றம், மேற்பார்வைக்குழு உடனடியாக முதல் கூட்டத்தை கூட்ட வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. CBI விசாரணைக்கு TN அரசு உரிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.