News October 13, 2025
நெல்லை மின்வாரியத்தின் மழைக்கால எச்சரிக்கை

மழைக்காலம் தொடங்கி விட்டதால் நெல்லை மாவட்ட மின்வாரியம் சார்பில் பொது மக்களுக்கு மின் விபத்து இன்றி செயல்படுவது குறித்த விளக்கங்களை தினமும் அளித்து வருகின்றனர். இன்று விடுத்துள்ள அறிவிப்பில், வீடுகளில் உள்ள பழைய உருகிய மின் இணைப்பு கம்பிகள் இருந்தால் அவை ஆபத்தை ஏற்படுத்தக் கூடியவை. எனவே எலக்ட்ரீசியன் வைத்து பழைய உருகிய மின்கம்பிகளை உடனடியாக மாற்றி அமைப்பது நல்லது என தெரிவித்துள்ளனர்.
Similar News
News October 13, 2025
2115 இடங்களில் சாதி அடையாளம் அழிப்பு – எஸ்பி தகவல்

எஸ்பி சிலம்பரசன் இன்று பத்ரிகையாளர்களுடன் கலந்துரையாடினார். அவர் கூறுகையில், கடந்தாண்டை விட இந்தாண்டு நெல்லையில் கொலை குற்றம் 20% குறைந்துள்ளது. சாதி பிரச்னையை தடுக்க தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறோம். இந்தாண்டு 21 போக்சோ வழக்கு பதியப்பட்டதில் 22 பேருக்கு தண்டனை வாங்கி கொடுத்துள்ளோம். இதுவரை 2115 இடங்களில் சாதி அடையாளங்கள் அழிக்கப்பட்டுள்ளது என்றார்.
News October 13, 2025
கல்லூரி பேராசிரியர்கள் தொடர் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

ஏ யூ டி மற்றும் மோட்டார் அமைப்பின் பொதுச்செயலாளர்கள் சேவியர் செல்வகுமார், செந்தாமரை கண்ணன் ஆகியோர் இன்று நெல்லையில் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில்; கோரிக்கைகளை நிறைவேற்றி வலியுறுத்தி நாளை கருப்பு நிற உடை அணிந்து கல்லூரிகளில் வாயில் முழக்க ஆர்ப்பாட்டம் 15ஆம் தேதி கல்லூரி கல்வி இணை இயக்குனர் அலுவலகங்களில் காத்திருப்பு போராட்டம் 16ஆம் தேதி பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தெரிவித்துள்ளனர்.
News October 13, 2025
போராட்டத்தை தடுக்க போலீஸ் முயற்சியா? – எஸ்பி பகீர் தகவல்

நெல்லை எஸ்பி சிலம்பரசன் இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில், நாங்குநேரி அருகே மஞ்சங்குளம் கிராமத்தில் பஸ் நிறுத்தாததை கண்டித்து போராட்டம் நடத்த இருந்ததால் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் போராடும் மக்களை போலீஸ் தடுக்க முயல்வதாக நேதாஜி சுபாஷ் சேனை அமைப்பு கூறி வருகிறது. இது முற்றிலும் தவறானது; சட்டப்படியான போராட்டத்திற்கு பாரபட்சமின்றி அனுமதி வழங்கப்படுகிறது என்று கூறியுள்ளார்.