News October 13, 2025
கரூர் வழக்கில் SC தீர்ப்பு நியாயமானது: ADMK

கரூர் துயர வழக்கில் CBI விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள SC, அதை கண்காணிக்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு ஒன்றையும் அமைத்துள்ளது. இந்நிலையில், இதனை வரவேற்பதாக அதிமுக தெரிவித்துள்ளது. நியாயமான, பாரபட்சமற்ற விசாரணை என்பது மக்களின் உரிமை என்ற அடிப்படையில் அளிக்கப்பட்டுள்ள SC உத்தரவை வரவேற்பதாக அதிமுகவின் X பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பாஜக தரப்பிலும் வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
Similar News
News October 13, 2025
தீபாவளி விடுமுறை.. பள்ளி மாணவர்களுக்கு அறிவிப்பு

தீபாவளி விடுமுறை கவனமாக பட்டாசு வெடிக்க வேண்டும் என பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, *கூட்டமான தெருக்கள், சாலைகளில் வெடிக்க வேண்டாம். *பெற்றோர் முன்னிலையில் குழந்தைகள் பாதுகாப்பாக வெடிக்க வேண்டும். *மூடிய பெட்டிகள், பாட்டில்களில் வைத்து வெடிக்கக் கூடாது. *குடிசைகள் அருகில் வெடிப்பதை தவிர்க்க வேண்டும். *ஹாஸ்பிடல் அருகே வெடிப்பதை தவிர்க்கவும். SHARE IT.
News October 13, 2025
தேர்தல் நேரத்தில் தேஜஸ்விக்கு வந்த சிக்கல்!

IRCTC ஹோட்டல் தொடர்பான ஊழல் வழக்கில் லாலு பிரசாத் யாதவ், தேஜஸ்வி யாதவ், ராப்ரி தேவி ஆகியோருக்கு எதிராக டெல்லி நீதிமன்றம் குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளது. மூவர் மீதும் மோசடி, கிரிமினல் சதி மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பிஹார் தேர்தலுக்கு சில வாரங்களே உள்ள நிலையில், இது RJD கட்சிக்கும், தேஜஸ்விக்கும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.
News October 13, 2025
BREAKING: விஜய் ஆதரவு

கரூர் துயர வழக்கை சிபிஐக்கு மாற்றி SC உத்தரவிட்டதை ஆதரிக்கும் விதமாக, தனது X பக்கத்தில் விஜய் பதிவிட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக அவர் வீடியோ வெளியிட்டு 13 நாள்களாகின்றன. அதன் பிறகு, சோஷியல் மீடியாவில் அவர் எந்த பதிவும் போடவில்லை. இந்நிலையில், ‘நீதி வெல்லும்’ என தற்போது பதிவிட்டுள்ளார். அவரது பதிவுக்கு ஆதரவளித்து தவெக தொண்டர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.