News April 16, 2024
சேலம்: சம்பளத்துடன் கூடிய விடுமுறை

சேலத்தில் உள்ள தொழிற்சாலைகள், கட்டட மற்றும் இதர கட்டுமான பணிகளில் பணிபுரியும் பணியாளர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து பணியாளர்களுக்கும் வாக்களிக்க வசதியாக தேர்தல் நாள் அன்று சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என சேலம் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர் தினகரன் நேற்று(ஏப்.15) தெரிவித்துள்ளார். இது குறித்து புகார்கள் இருந்தால் 95973 86807 எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்.
Similar News
News September 19, 2025
சேலம்: லஞ்சம் வாங்கிய பெண் சர்வேயர் சஸ்பெண்ட்!

ஆத்தூர், துலுக்கானூர் கிராமத்தை சேர்ந்த குமரேசன் புதிதாக வாங்கிய வீட்டுமனையை தனிப்பட்டாவாக மாற்ற, ஆத்தூர் வட்டாட்சியர் அலுவலக சர்வேயர் ஜீவிதாவை அணுகியுள்ளார். அப்போது, ஜீவிதா ரூ.10,000 லஞ்சம் கேட்டுள்ளார். இது குறித்து குமரேசன் லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் புகார் அளித்துள்ளார். பணத்தை கொடுக்கும்போது கையும் களவுமாக பிடிபட்ட ஜீவிதா கைது செய்யப்பட்டு, தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
News September 19, 2025
சேலம்: இனி அலைச்சல் வேண்டாம்.. ரொம்ப ஈசி!

சேலம் மக்களே, ரயிலில் டிக்கெட் புக் செய்ய ஏற்கனவே பல செயலிகள் உண்டு. இந்நிலையில், முன்பதிவில்லா ரயில் டிக்கெட், ரயிலில் உணவு உட்பட அனைத்து இதர சேவைகளுக்காக <
News September 19, 2025
சேலத்தில் லஞ்சமா? ஒரே CALL போதும்!

சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்கும் அதிகாரிகள் குறித்து பொதுமக்கள் எந்தவித தயக்கமும் இன்றி புகார் அளிக்கலாம். லஞ்சம் தொடர்பான புகார்களை dspslmdvac.tnpol@nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விரிவாக எழுதி அனுப்பலாம். அல்லது 0427-2418735 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு உங்கள் புகாரைப் பதிவு செய்யலாம். ஊழலற்ற நிர்வாகத்தை உறுதி செய்ய அனைவருக்கும் இதை ஷேர் பண்ணுங்க!