News October 13, 2025
தஞ்சை மாவட்டத்திற்கு மழை அறிவிப்பு!

தஞ்சாவூர் மாவட்டத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாகவே பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வரும் அக்.15,17,18-ல் புதுகை, நாகை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட , மாவட்டத்தின் பல இடங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. எனவே பொதுமக்கள் சற்று எச்சரிக்கையோடு இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News October 14, 2025
தஞ்சை அருகே பாலியல் தொழில்; இருவர் கைது

நாஞ்சிக்கோட்டை புறவழிச்சாலையில் என்.என்.பேலஸ் என்ற விடுதில் நேற்று விபாசார தொழில் நடப்பதாக தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் அங்கு சோதனை செய்ததில் விடுதியின் உள்ளே ஸ்பா என்ற பெயரில் மசாஜ் சென்டர் நடத்தி விபசார தொழிலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து உரிமையாளர் மற்றும் மேலாளரை கைது செய்தனர். மேலும் அங்கிருந்த 2 பெண்களை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
News October 14, 2025
தஞ்சை அருகே முதலை கடித்து படுகாயம்!

தஞ்சை, அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில் ஜெயபிரகாஷ்(45), என்ற மீனவர் மீன் பிடித்து கொண்டிருந்தார். அப்போது திடீரென அவரை முதலை கடித்துள்ளது. இதில் படுகாயம் அடைந்த ஜெயப்பிரகாசை அருகில் இருந்தவர்கள் மீட்டு, கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சையாக சேர்த்து உள்ளனர். இந்நிலையில் கொள்ளிடம் ஆற்றில் திரியும் முதலைகளை கட்டுப்படுத்த வேண்டும் என சமூக அலுவலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
News October 14, 2025
தஞ்சாவூர்: ஆற்றில் மூழ்கி இளைஞர் மாயம்

கும்பகோணம் மேலக்காவேரி பகுதியைச் சேர்ந்த பாரதி. தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் இவர், நேற்று மாலை மூப்பன்கோவில் காவிரி ஆற்றில் நண்பர்களுடன் குளித்த போது ஆற்றில் மூழ்கி மாயமானார். தகவலின் பெயரில் தீயணைப்பு துறையினர், போலீசார் ஆகியோர் இளைஞர் பாரதியை தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம் குறித்து கும்பகோணம் கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.