News April 16, 2024
தேர்தல் பணியில் 5164 பேர்

தமிழகத்தில் ஒரே கட்டமாக வருகின்ற 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. திருப்பத்தூர் மாவட்டத்தில் மொத்தம் 1042 மையங்களில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் 5164 பேர் தேர்தல் பணியில் ஈடுபடுகின்றனர். கூடுதலாக 95 பேர் மைக்ரோ அப்சர்வர் பணியாற்ற உள்ளனர் என மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார்.
Similar News
News October 20, 2025
திருப்பத்தூர் மக்களுக்கு காவல்துறை எச்சரிக்கை

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பாலாற்றில் வடகிழக்கு பருவமழையின் காரணமாகவும், ஆந்திர மாநிலத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாகவும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், பொதுமக்கள் ஆற்றில் இறங்கவோ அல்லது குளிக்கவோ வேண்டாம் என்று மாவட்ட காவல்துறை சார்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
News October 20, 2025
திருப்பத்தூர்: இரவு ரோந்து காவலர்களின் விவரம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் அக்-20 இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News October 20, 2025
திருப்பத்தூர் மக்களே.. உடனே SAVE பண்ணுங்க!

திருப்பத்தூர் மக்களே அவசர காலத்தில் உதவும் எண்கள்: 1.தீயணைப்புத் துறை – 101 2.ஆம்புலன்ஸ் உதவி எண் – 102 & 108 3.போக்குவரத்து காவலர் -103 4.பெண்கள் பாதுகாப்பு – 181 & 1091 5.ரயில்வே விபத்து அவசர சேவை – 1072 6. சாலை விபத்து அவசர சேவை – 1073 7.பேரிடர் கால உதவி – 1077 8. குழந்தைகள் பாதுகாப்பு – 1098 9.சைபர் குற்றங்கள் தடுப்பு – 1930 10.மின்சாரத்துறை – 1912. மக்களே.. இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!