News October 13, 2025

கள்ளக்குறிச்சி: கனமழை எச்சரிக்கை!

image

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய கடலோரப் பகுதிகளின் மேல், ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டத்திலும் புதுச்சேரியின் ஒரு சில இடங்களிலும் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் பகுதியில் வானிலை எப்படி உள்ளது என கமெண்ட் பண்ணுங்க.

Similar News

News October 13, 2025

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திங்கட்கிழமை தோறும் நடைபெறும் மாவட்ட ஆட்சியரின் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கள்ளக்குறிச்சி மாவட்ட வருவாய் அலுவலர் ஜீவா தலைமையில் இன்று (அக்.13) நடைபெற்றது. இதில் பட்டா மாற்றம் முதியோர் உதவி தொகை உள்ளிட்ட பல்வேறு விதமான கோரிக்கைகள் தொடர்பாக ஏராளமான பொதுமக்கள் மாவட்ட வருவாய் அலுவலரிடம் நேரடியாக மனுக்களை அளித்தனர்.

News October 13, 2025

கள்ளக்குறிச்சி : மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்

image

கள்ளக்குறிச்சியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் அக்.17 அன்று கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறவுள்ளது. இம்முகாமில் 10th,+2, ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்களும் மற்றும் பட்டதாரிகளும் இந்த முகாமில் கலந்து கொள்ளலாம். மேலும், இம்முகாம் குறித்த விவரங்களுக்கு 8807204332/04151-295422 தொடர்புகொள்ளலாம்.

News October 13, 2025

கள்ளக்குறிச்சி: மின் கட்டணம் அதிகமா வருதா? இதை பண்ணுங்க!

image

கள்ளக்குறிச்சியில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், பிரதான் மந்திரி மானியத்துடன் வீடுகளுக்கு சோலார் மின் இணைப்பு வழங்குவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மின்சார செலவை குறைக்கவும், மின் சிக்கனத்தை ஊக்குவிக்கவும் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் <>ஆன்லைன்<<>> மூலம் விண்ணப்பித்து இந்த மானிய சலுகையைப் பயன்படுத்திக் கொள்ளலாம். TANGEDCO இணையதளத்தையும் பார்வையிடலாம். ஷேர்!

error: Content is protected !!