News October 13, 2025

புதுச்சேரி: அடிக்கல் நாட்டிய மத்திய அமைச்சர்

image

புதுச்சேரிக்கு இன்று வருகை புரிந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ரூ.436 கோடி மதிப்பில் இந்திரா காந்தி சதுக்கம் முதல் ராஜீவ் காந்தி சதுக்கம் வரை 4 கி.மீ. தூரத்தில் உயர்மட்ட வழித்தடம், ரூ.25 கோடி மதிப்பில் 14 கி.மீ. நீளமுள்ள ECR சாலை மேம்படுத்தல் பணிக்கு அடிக்கல் நாட்டினார். மேலும் ரூ.1,588 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட புதுச்சேரி-பூண்டிாங்குப்பம 4 வழி சாலையை நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்தார்.

Similar News

News October 13, 2025

புதுச்சேரி: விவசாயிகள் குறைதீர்பு கூட்டம் அறிவிப்பு!

image

காரைக்கால் பெருந்தலைவர் காமராஜர் நிர்வாக வளாகத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் வேளாண் துறை சார்பில் (14.10.2025) காலை 11 மணியளவில் புதுச்சேரி மாநில வேளாண்துறை அமைச்சர் தேனி ஜெயக்குமார் தலைமையில், காரைக்கால் மாவட்ட ஆட்சியர் ரவி பிரகாஷ் முன்னிலையில், விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் காரைக்கால் மாவட்ட விவசாயிகள் பங்கேற்க உள்ளனர்.

News October 13, 2025

புதுச்சேரி: VOTER ID வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் வாக்காளர் அட்டையில் உங்கள் பெயர், EPIC எண், பாலினம், முகவரி ஆகியவை சரியாக உள்ளதா என தெரிந்துகொள்ள அலுவலகங்களுக்கு இனி அலைய வேண்டாம்.<> electoralsearch.eci.gov.in<<>> என்ற இணையதளத்தில் சென்று உங்கள் தரவுகளை வீட்டிலிருந்தே சரிபார்த்துக் கொள்ளலாம். இதன் மூலம் உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படுவதை தடுக்கலாம். SHARE !!

News October 13, 2025

புதுச்சேரி வருகை தந்த மத்திய அமைச்சர்

image

புதுச்சேரிக்கு இன்று வருகை தந்துள்ள மத்திய தகவல் தொடர்பு மற்றும் ஒளிபரப்புத்துறை இணை அமைச்சர் எல்.முருகனை தட்டான்சாவடி பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் புதுச்சேரி சட்டப்பேரவை தலைவர் செல்வம் சால்வை அணிவித்து மலர் கொத்து கொடுத்து வரவேற்றார். அப்போது பாஜக மாநில தலைவர் வி.பி.ராமலிங்கம், சட்டமன்ற உறுப்பினர் ஜி.என்.எஸ் ராஜசேகர் ஆகியோர் உடன் இருந்தனர்.

error: Content is protected !!