News October 13, 2025
அரசியல் வெற்றியா? துயரில் துவள்பவர்களுக்கான நீதியா?

கரூர் துயரம், திமுக அரசின் சதி என்று முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டால் ‘Stand with Viay’ என்று ஒரு கூட்டம் கிளம்பியது. இந்த சமயத்தில் அரசியல் பேசாமல், பாதிக்கப்பட்ட மக்கள் பக்கமே நிற்க வேண்டும் என்று ‘Stand with victims’ என்றும் நெட்டிசன்கள் குரல் எழுப்பினர். இந்நிலையில், CBI விசாரணைக்கு மாற்றம் என்ற SC-ன் தீர்ப்பு தவெகவிற்கு கிடைத்த வெற்றி என்ற பேச்சு எழுந்துள்ளது. இந்த தீர்ப்பு யாருக்கு வெற்றி?
Similar News
News October 13, 2025
உலகின் ஆபத்தான டாப் 10 சாலைகள்

சுற்றுலா பயணம் என்றாலே ஒரே சுகம் தான். ஆனால், அதில் ‘த்ரில்’ இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பவர்கள், ரிஸ்கியான இடங்களுக்கு செல்ல ஆசைப்படுவர். சிலர் பயணமே ரிஸ்கியாக இருக்க வேண்டுமென்று எதிர்பார்ப்பார்கள். அப்படி அழகுடன் ஆபத்துகளையும் ஒளித்து வைத்திருக்கும் டாப் 10 ஆபத்தான சாலைகளை மேலே போட்டோக்களாக கொடுத்துள்ளோம். ஸ்வைப் செய்து பாருங்கள். நீங்கள் பயணித்த ஆபத்தான சாலைகளை கமெண்ட்டில் சொல்லுங்கள்.
News October 13, 2025
விஜய் நிச்சயம் பதில் சொல்ல வேண்டும்: TKS இளங்கோவன்

விஜய் ஏன் 7.5 மணி நேரம் தாமதமாக வந்தார் என்பதற்கு இன்னும் தவெக தரப்பில் பதில் அளிக்கவில்லை என டிகேஎஸ் இளங்கோவன் விமர்சித்துள்ளார். விஜய் சொன்ன நேரத்துக்கு கரூர் சென்றிருந்தால் அசம்பாவிதமே நடந்திருக்காது எனவும், 41 உயிர்கள் பறிபோனதற்கு முக்கிய காரணம் தவெகதான் என்றும் குற்றம்சாட்டியுள்ளார். தாமதத்திற்கான காரணம் குறித்து அவர் பதில் சொல்லும் வரை விடப்போவதில்லை எனவும் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
News October 13, 2025
தமிழக மீனவர்கள் மீது கடற்கொள்ளையர் தாக்குதல்!

கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்கள் 21 பேர் மீது, இலங்கை கடற்கொள்ளையர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இலங்கை கடற்படையினர் ஒருபுறம், கடற்கொள்ளையர் மறுபுறம் என தினந்தோறும் தொல்லை கொடுப்பதாக மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். முன்னதாக, கடந்த வாரம் ராமேஸ்வரம் மீனவர்கள் 47 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்ததை கண்டித்து, அங்கு 3-வது நாளாக வேலைநிறுத்த போராட்டம் தொடர்கிறது.