News October 13, 2025
11-ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து: என்னென்ன மாற்றங்கள்?

11-ம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது நடப்பு கல்வியாண்டு (2025-26) முதலே அமலுக்கு வருகிறது. எனவே 2017-18 கல்வியாண்டிற்கு முன்பு இருந்த, பள்ளிகள் மூலம் தேர்வுகள் நடத்தும் முறை பின்பற்றப்படும். இனி 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் மட்டும் தனியாக வழங்கப்படும். 11-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள், 2030-க்குள் அரியர் தேர்வை எழுதிக் கொள்ளலாம்.
Similar News
News October 13, 2025
தமிழக மீனவர்கள் மீது கடற்கொள்ளையர் தாக்குதல்!

கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்கள் 21 பேர் மீது, இலங்கை கடற்கொள்ளையர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இலங்கை கடற்படையினர் ஒருபுறம், கடற்கொள்ளையர் மறுபுறம் என தினந்தோறும் தொல்லை கொடுப்பதாக மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். முன்னதாக, கடந்த வாரம் ராமேஸ்வரம் மீனவர்கள் 47 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்ததை கண்டித்து, அங்கு 3-வது நாளாக வேலைநிறுத்த போராட்டம் தொடர்கிறது.
News October 13, 2025
சற்றுமுன்: ஒரே நாளில் ₹7,000 உயர்வு.. புதிய உச்சம் தொட்டது

தங்கத்தை விட கூடுதல் மடங்கு விலையேற்றத்தை சந்தித்து வருகிறது வெள்ளி. இன்று ஒரே நாளில் வெள்ளி விலை கிலோவுக்கு ₹7,000 அதிகரித்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. தற்போது, வெள்ளி 1 கிராம் ₹197-க்கும், 1 கிலோ ₹1.97 லட்சத்திற்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த 4 நாள்களில் மட்டும் வெள்ளி கிலோவுக்கு ₹20,000 அதிகரித்திருப்பது நடுத்தர மக்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.
News October 13, 2025
ஊதுபத்தியில் இப்படி ஒரு ஆபத்தா?

வீட்டின் பூஜை அறைகளில் ஊதிபத்தியும் சாம்பிராணியும் பக்தி மணம் பரப்புகின்றன. இருப்பினும், சில வகை ஊதுபத்திகளில் இருந்து வரும் புகை, நமது ஆரோக்கியத்திற்கு ஆபத்தானதாக மாறி வருவதாக டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். அவற்றில் உள்ள ரசாயன கலப்புகளால், புகையை சுவாசிக்கும் போது நுரையீரல் பாதிப்பு, ஏன் புற்றுநோய் ஏற்படும் ஆபத்து கூட உள்ளதாம். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!