News April 16, 2024
திமுக வேட்பாளர் இறுதி கட்ட தேர்தல் பிரச்சாரம்

நீலகிரி மக்களவைத் தொகுதி INDIA கூட்டணி வேட்பாளர் ஆ.ராசா நாளை (ஏப்.17) கடநாடு கிராமத்தில் காலை 10.30 மணியளவில் பிரச்சாரத்தை தொடங்குகிறார். எபநாடு 11 மணி, கூக்கல் தொரை 12 மணி, தும்மனட்டி பகல் 1 மணி, உதகை நகர நொண்டிமேடு 3 மணி, காந்தல் பஜார் மாலை 4 மணி, உதகை மெயின் பஜாரில் மாலை 5 மணி அளவில் இறுதி கட்ட தேர்தல் பிரச்சாரம் செய்கிறார். இந்த தகவலை மாவட்ட திமுக செயலாளர் பா.மு.முபாரக் தெரிவித்தார்.
Similar News
News September 20, 2025
ஊட்டியில் திமுக சார்பில் ஓரணியில் தமிழ்நாடு!

நீலகிரி மாவட்ட திமுக பொறுப்பாளர் கே.எம்.ராஜு வெளியிட்ட செய்தி குறிப்பில்; நாளை ஓரணியில் தமிழ்நாடு நிகழ்ச்சிக்கான மாபெரும் பொதுக்கூட்டம் உதகை ஏடிசி ஜீப் நிறுத்தம் முன்பு மதியம் 2 மணிக்கு நடைபெற உள்ளது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா சிறப்புரை வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளார். இதில் திமுக நிர்வாகிகள் கலந்து கொள்ள அழைப்பு விடுத்துள்ளார்.
News September 19, 2025
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மாவட்ட ஆட்சியர் ஆய்வு!

ஊட்டி பிங்கர் போஸ்ட் அருகே உள்ள நீலகிரி மாவட்ட கூடுதல் ஆட்சியர் அலுவலக வளாகத்தில், உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிடங்கில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதை, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில், மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
News September 19, 2025
தூய்மை பணியை மேற்கொள்ள ஆட்சியர் உறுதிமொழி!

தூய்மை மிஷின் 2.0 திட்டத்தின் கீழ் தூய்மை செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நீலகிரி மாவட்ட கூடுதல் ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., பல்வேறு அலுவலகங்களில் அந்தந்த துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் மூலம் தூய்மை பணியில் மேற்கொள்ள வேண்டும், என அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆட்சியர் உறுதிமொழி ஏற்றுக்கொண்டார்.