News October 13, 2025

BREAKING நெல்லை: 2 குழந்தைகளுடன் தாய் தற்கொலை

image

கங்கைகொண்டான் அருகே பருத்திகுளத்தை சேர்ந்த முத்தையா மனைவி முத்துலட்சுமி. இவர்களுக்கு முத்தமிழ்(4),சுசிலா(3) என 2 குழந்தைகள் உள்ளது. முத்தையா முத்துலட்சுமி இருவருக்கிடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்த நிலையில் இன்று மீண்டும் பிரச்சனை ஏற்பட்டு விரக்தி அடைந்த முத்துலட்சுமி தனது இரண்டு பெண் குழந்தைகளை கிணற்றில் தள்ளிவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Similar News

News October 13, 2025

போராட்டத்தை தடுக்க போலீஸ் முயற்சியா? – எஸ்பி பகீர் தகவல்

image

நெல்லை எஸ்பி சிலம்பரசன் இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில், நாங்குநேரி அருகே மஞ்சங்குளம் கிராமத்தில் பஸ் நிறுத்தாததை கண்டித்து போராட்டம் நடத்த இருந்ததால் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் போராடும் மக்களை போலீஸ் தடுக்க முயல்வதாக நேதாஜி சுபாஷ் சேனை அமைப்பு கூறி வருகிறது. இது முற்றிலும் தவறானது; சட்டப்படியான போராட்டத்திற்கு பாரபட்சமின்றி அனுமதி வழங்கப்படுகிறது என்று கூறியுள்ளார்.

News October 13, 2025

நெல்லை மின்வாரியத்தின் மழைக்கால எச்சரிக்கை

image

மழைக்காலம் தொடங்கி விட்டதால் நெல்லை மாவட்ட மின்வாரியம் சார்பில் பொது மக்களுக்கு மின் விபத்து இன்றி செயல்படுவது குறித்த விளக்கங்களை தினமும் அளித்து வருகின்றனர். இன்று விடுத்துள்ள அறிவிப்பில், வீடுகளில் உள்ள பழைய உருகிய மின் இணைப்பு கம்பிகள் இருந்தால் அவை ஆபத்தை ஏற்படுத்தக் கூடியவை. எனவே எலக்ட்ரீசியன் வைத்து பழைய உருகிய மின்கம்பிகளை உடனடியாக மாற்றி அமைப்பது நல்லது என தெரிவித்துள்ளனர்.

News October 13, 2025

BREAKING: சேரை கல்லூரி பேராசிரியர் மீது வழக்கு

image

சேரன்மகாதேவி பிரபல தனியார் பொறியியல் கல்லூரியில் மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக கூறி பேராசிரியர் ஒருவரை மாணவர்கள் தாக்கினர். எனவே மாணவர்கள் 4 பேரை போலீசார் கைது செய்த நிலையில் பேராசியர் மீது புகார் எதுவும் கொடுக்காததால் அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்தனர். இந்நிலையில் பேராசிரியர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளதாக எஸ்பி சிலம்பரசன் இன்று தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!