News October 13, 2025
கரூர் சம்பவத்திற்கு போலீசாரே காரணம்: ஆதவ் அர்ஜுனா

கரூர் பிரசாரத்திற்கு விஜய், தாமதமாக வந்தார் என சொல்வது அபாண்டமான பொய் என ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், கரூர் காவல்துறைதான் தங்களை வரவேற்றது என விளக்கம் அளித்துள்ளார். கரூரில் அசாதாரண சூழல் நிலவுவதாக இருந்தால் பெரம்பலூர் மாவட்டத்தை போல ஏன் தங்களுக்கு முதலிலேயே கூறவில்லை எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
Similar News
News October 13, 2025
இதற்காகவே 3 பேருக்கு பொருளாதார நோபல் பரிசு

2025-ல் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு, ஜோயல் மொகிர்(USA), பிலிப் ஆகியான்(FRA), பீட்டர் ஹோவிட்(UK) ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பரிசில் ஒரு பாதி ‘தொழில்நுட்ப முன்னேற்றம் மூலம் நீடித்த வளர்ச்சி காரணிகளை அடையாளம் கண்டதற்காக’ மொகிருக்கும், இன்னொரு பாதி ‘படைப்பாக்க அழித்தல் மூலம் நீடித்த வளர்ச்சிக் கோட்பாட்டை உருவாக்கியதற்காக’ ஆகியான், ஹோவிட் இருவருக்கும் கூட்டாகவும் பகிர்ந்தளிக்கப்படும்.
News October 13, 2025
BREAKING: தங்கம் விலை ஒரே நாளில் தடாலடியாக மாறியது

ஆபரணத் தங்கத்தின் விலை இன்றும் 2 முறை அதிகரித்துள்ளது. காலையில் சவரனுக்கு ₹200 அதிகரித்த நிலையில், மதியம் மேலும் ₹440 உயர்ந்திருப்பதால் ஒரே நாளில் ₹640 கூடியுள்ளது. தற்போது, 22 காரட் தங்கம் 1 கிராம் ₹11,580-க்கும், 1 சவரன் ₹92,640-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி விலையும் தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது.
News October 13, 2025
RCB உடன் ஒப்பந்தம்: மறுத்த விராட் கோலி!

RCB உடனான வணிக ஒப்பந்தத்தை புதுப்பிக்க விராட் கோலி மறுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் IPL-ல் இருந்து கோலி <<17989900>>ஓய்வுபெறுகிறாரா<<>> என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதேநேரம், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா, அவருக்கு வணிக ஒப்பந்தம், விளையாட்டு ஒப்பந்தம் என இரட்டை ஒப்பந்தம் இருக்கலாம் என்றார்.