News October 13, 2025
BREAKING: விஜய்க்கு முதல் வெற்றி

SC உத்தரவை அடுத்து, கரூர் விவகார வழக்கு விசாரணை சிபிஐக்கு மாற்றப்படவுள்ளது. சிபிஐ விசாரணையை கண்காணிக்க ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் விசாரணைக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. TN அரசின் கீழ் செயல்படும் அதிகாரிகள் கரூர் விவகாரத்தை விசாரிக்கக்கூடாது என TVK கோரிக்கை விடுத்ததுபோல் இத்தீர்ப்பு வந்துள்ளது. இது, விஜய் தரப்புக்கு முதல் வெற்றியாக பார்க்கப்படுகிறது.
Similar News
News October 13, 2025
RCB உடன் ஒப்பந்தம்: மறுத்த விராட் கோலி!

RCB உடனான வணிக ஒப்பந்தத்தை புதுப்பிக்க விராட் கோலி மறுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் IPL-ல் இருந்து கோலி <<17989900>>ஓய்வுபெறுகிறாரா<<>> என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதேநேரம், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா, அவருக்கு வணிக ஒப்பந்தம், விளையாட்டு ஒப்பந்தம் என இரட்டை ஒப்பந்தம் இருக்கலாம் என்றார்.
News October 13, 2025
BREAKING: பொருளாதாரத்துக்கு நோபல் பரிசு

2025-ம் ஆண்டின் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு 3 பேருக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜோயல் மொகிர், பிலிப் அகியான், பீட்டர் ஹோவிட் ஆகியோர் இந்த ஆண்டுக்கான நோபல் பரிசை பகிர்ந்து கொள்கின்றனர். பொருளாதாரப் பிரிவுக்கு வழங்கப்படும் நோபல் பரிசு ‘THE SVERIGES RIKSBANK PRIZE’ என்று அழைக்கப்படுகிறது.
News October 13, 2025
சிபிஐக்கு மாற்றியதில் மகிழ்ச்சி: அண்ணாமலை

கரூர் துயர வழக்கை உச்சநீதிமன்றம் சிபிஐக்கு மாற்றியது மகிழ்ச்சி அளிப்பதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னையில் பேட்டியளித்த அவர், கரூர் சம்பவத்தில் முதலில் சிபிஐ விசாரணை கோரியது பாஜக தான் என்று குறிப்பிட்டார். கரூர் சம்பவத்தில் தொடர்புடைய அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.