News October 13, 2025
விழுப்புரம்: ரூ.5 லட்சம் இலவச மருத்துவ காப்பீடு!

விழுப்புரம் தி.மலை மக்களே, முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், 1 குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ் ஆகியவற்றுடன் விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து, அடையாள அட்டையை பெற்றுக் கொள்ளலாம். மேலும் தகவல்களுக்கு 1800 425 3993 அழைக்கவும். ஷேர் பண்ணுங்க.
Similar News
News October 13, 2025
விழுப்புரம் : மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

விழுப்புரம் மாவட்ட தென்பெண்ணை ஆற்றில் மக்கள் இறங்க வேண்டாம் என ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் நேற்று (அக்.12) எச்சரித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் அணையிலிருந்து தற்பொழுது 6000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது மழை பெய்து வருவதால், நாளை(அக்.13) அதிகளவு நீர் திறக்க வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் ஆற்றில் இறங்கவோ கடக்கவோ கூடாது என எச்சரித்துள்ளார்.
News October 13, 2025
போதை மாத்திரை விற்பனை செய்த இருவர் கைது

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட அம்மாக்குளம் ஏரிக்கரை பகுதியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த சென்னை குன்றத்தூர் பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ், செஞ்சியை சேர்ந்த அன்பரசன் ஆகிய இருவரை போலீசார் கைது நேற்று (அக்.12) செய்தனர். இவர்களிடமிருந்து 17 போதை மாத்திரைகள், போதை ஊசி மற்றும் இருசக்கர வாகனம் பணம் ரூ.20 ஆயிரம் ஆகியவை கைப்பற்றப்பட்டது.
News October 13, 2025
விழுப்புரம்: இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும். SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) HDFC (7070022222) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். ஷேர் பண்ணுங்க.