News October 13, 2025
JUST IN தேனிக்கு கனமழை எச்சரிக்கை

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் இன்று(அக்.13) விருதுநகர், மதுரை, தேனி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் அடுத்த ஒரு வாரம் தமிழ்நாட்டில் கனமழை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் தீபாவளியன்று கனமழை இருக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. SHARE IT
Similar News
News November 16, 2025
தேனி மருத்துவகல்லூரி மாணவிகள் விபத்தில் படுகாயம்

தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் பயின்று வரும் மாணவி ராகினி என்பவர் நேற்று (நவ.15) அவரது இருசக்கர வாகனத்தில் அவரது தோழியான மீனாட்சி என்பவரை அழைத்துக் கொண்டு தேனி சென்று விட்டு மீண்டும் கல்லூரிக்கு திரும்பி உள்ளார். மதுரை சாலையில் சென்று கொண்டிருந்த பொழுது இருசக்கர வாகனம் நிலை தடுமாறி விபத்து ஏற்பட்டது. இதில் மாணவிகள் இருவரும் படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்து க.விலக்கு போலீசார் வழக்கு பதிவு.
News November 16, 2025
தேனி: வயிற்று வலியால் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை

உத்தமபாளையம் அருகே அனுமந்தன்பட்டியை சேர்ந்தவர் ராஜேஷ் (37). இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததன் காரணமாக அவருக்கு தீராத வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. அதற்கு சிகிச்சை எடுத்தும் பலனளிக்காத காரணத்தினால் வலியின் வேதனையில் இருந்து வந்த ராஜேஷ் நேற்று (நவ.15) அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து உத்தமபாளையம் போலீசார் வழக்கு பதிவு
News November 16, 2025
தேனி: 1,429 காலியிடங்கள்.. ரூ.71,900 வரை சம்பளம்

தேனி மக்களே, தமிழ்நாடு சுகாதாரத்துறையில் (TN MRB) காலியாக உள்ள Health Inspector Grade-II பணிகளுக்கு 1429 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பள்ளியில் தமிழை ஒரு படமாக பயின்று தகுதியான படிப்பை முடித்தவர்கள் நவ. 16 (இன்று)-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். சம்பளம் – ரூ.19,500 – ரூ.71,900. மேலும் விவரங்கள் அறிய, விண்ணப்பிக்க <


