News October 13, 2025

அரியலூரில் புதிய உயா்மட்ட பாலம் திறப்பு

image

அரியலூர் மாவட்டம், ஆதனூரில் மருதையாற்றின் குறுக்கே ரூ.14.35 கோடியில் நெடுஞ்சாலைத் துறை கட்டிய உயா்மட்ட பாலம் திறந்து வைக்கப்பட்டது. இதை போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் திறந்து வைத்து பேருந்து சேவையையும் தொடங்கி வைத்தார். இப்பாலம் 10-க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு பயனளிக்கும் என்றும், பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கை நிறைவேறியதாகவும் தெரிவித்தார்.

Similar News

News October 14, 2025

அரியலூர்: காவல் துறை சார்பில் கண்காணிப்பு கோபுரம்

image

அரியலூர் நகர் கடைவீதி பகுதி பல்வேறு பகுதிகளில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் ஏராளமானூர் வருகை தந்து செல்கின்றார்கள். இதனைத் தொடர்ந்து பொதுமக்களின் பாதுகாப்பு நலன் கருதி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்படி அரியலூர் நகரில் பல்வேறு பகுதிகளில் காவல்துறை சார்பில் கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது.

News October 13, 2025

அரியலூர்: VOTER ID வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

அரியலூர் மக்களே, 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் வாக்காளர் அட்டையில் உங்கள் பெயர், EPIC எண், பாலினம், முகவரி ஆகியவை சரியாக உள்ளதா என தெரிந்துகொள்ள அலுவலகங்களுக்கு இனி அலைய வேண்டாம்.<> electoralsearch.eci.gov.in<<>> என்ற இணையதளத்தில் உங்கள் தரவுகளை வீட்டிலிருந்தே சரிபார்த்துக் கொள்ளலாம். இதன் மூலம் உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படுவதை தடுக்கலாம். SHARE !!

News October 13, 2025

அரியலூர்: ரேஷன்கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

ரேஷன் கார்டுகளில் மாற்றம் செய்ய போறீங்களா?? தமிழக அரசின் ரேஷன் கார்டுகளுக்கு கொண்டு வந்துள்ள புதுநடைமுறைகள் இதோ: நபர்கள் சேர்த்தல், பெயர் நீக்குதல், முகவரி மாற்றம், கார்டு மறுபடியும் பிரிண்ட் செய்தல் போன்றவைகளை வருடத்திற்கு 2 முறை மட்டுமே ஆன்லைனில் செய்ய முடியும். எனவே மாற்றம் செய்யும் போது ஆவணங்களை சரிபார்த்து சரியா பண்ணுங்க.. ரேஷன் அட்டைகளில் மாற்றம் செய்ய <>க்ளிக்<<>> பண்ணுங்க. SHARE பண்ணுங்க.

error: Content is protected !!