News October 13, 2025
16-ம் நாள் முடிந்தது.. என்ன செய்ய போகிறார் விஜய்?

கரூர் துயரம் (செப்.27) நடந்து 3 நாள்களுக்கு பிறகு (செப்.30) சம்பவம் குறித்து வீடியோ வெளியிட்டார் விஜய். ஆனால், அதன் பிறகு அவர் வெளியே தலைகாட்டாதது பேசுபொருளானது. இதனிடையே, அக்.17-ல் கரூருக்கு நேரில் செல்லவுள்ளதாகவும் தகவல் வெளியானது. அதேநேரம், ஆதவ் அர்ஜுனா கூறிய 16 நாள் துக்கமும் (அக்.12) முடிவடைந்துள்ளது. <<17990015>>SC<<>>-ன் தீர்ப்பும் இன்று வெளியாகும் நிலையில், விஜய் என்ன செய்ய போகிறார்?
Similar News
News October 13, 2025
விஜய் வசமாக சிக்கி கொண்டாரா?

கரூர் விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு தவெகவினர் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். அதேநேரத்தில், எலியிடம் இருந்து தப்பித்து புலியிடம் விஜய் சிக்கிக் கொண்டதாக திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றனர். அதாவது, சிபிஐ விசாரணை மூலம் பாஜக பிடியில் அவர் சிக்கியிருப்பதாக கூறுகின்றனர். மறுபுறம், எதையும் துணிந்து எதிர்கொள்வோம் என தவெகவினர் பதிலடி கொடுக்கின்றனர். இதுபற்றி உங்க கருத்து?
News October 13, 2025
பண்டிகைக்கு ரெடியா மக்களே..!

இந்தியாவில் பண்டிகைகளுக்கு தட்டுப்பாடே கிடையாது. திரும்பும் பக்கமெல்லாம் பண்டிகை என்பது போல், நாட்டின் மூலை முடுக்குகளில் விழாக்கள் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், இந்தியாவில் பிரமாண்டமாக கொண்டாடப்படும் பாரம்பரிய விழாக்களை மேலே swipe செய்து பாருங்கள். உங்களுக்கு பிடித்த விழா எது, நீங்கள் கொண்டாட விரும்பும் பண்டிகை எது என்று கமெண்ட் பண்ணுங்க.
News October 13, 2025
திமுக அரசுக்கு சவுக்கடி: எல்.முருகன்

கரூர் சம்பவத்தில், திமுக அரசுக்கு உச்சநீதிமன்றம் சரியான சவுக்கடி கொடுத்துள்ளதாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். இது குறித்த அவரது X பதிவில், கரூர் வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றியதும், ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் SIT அமைக்க உத்தரவிட்டிருப்பதும் வரவேற்கத்தக்கது என்று குறிப்பிட்டுள்ளார். விரைவில் கரூர் சம்பவத்தின் உண்மை வெளிவரும் என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.