News April 16, 2024
BREAKING: ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.640 உயர்வு

ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று குறைந்த நிலையில், இன்று மீண்டும் கிடுகிடுவென அதிகரித்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.54,960க்கும், கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.6,870க்கும் விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 அதிகரித்து ரூ.90.50க்கும், கிலோவிற்கு ரூ.1000 அதிகரித்து ரூ.90,500க்கும் விற்பனையாகிறது.
Similar News
News October 17, 2025
ஹாட்ரிக் அடித்தாரா PR.. டியூட் ரிவ்யூ!

கதை: திருமண நாளில் வேறொருவரை காதலிப்பதாக மமிதா, பிரதீப்பிடம் கூற அடுத்தடுத்து நடக்கும் கலாட்டாவே இந்த ‘டியூட்’. ப்ளஸ்: PR வழக்கம் போல அசத்தி விட்டார். பல இடங்களில் சரத்குமார் ஸ்கோர் செய்கிறார். மமிதா ஓகே. முதல் பாதி பயங்கர Fun. சாய் அபயங்கரின் இசை ஈர்க்கிறது. பல்ப்ஸ்: சுவாரசியமே இல்லாத 2-ம் பாதி. சூப்பராக ஆரம்பித்து, சுமாராக முடிந்தான் ‘டியூட்’.
News October 17, 2025
சொந்த வாகனங்களை வாடகைக்கு விட்டால் அபராதம்

தீபாவளி பண்டிகைக்கு பலரும் சொந்த ஊர்களுக்கு செல்லும் நிலையில், சிலர் வாடகை உரிமம் இல்லாத சொந்த வாகனங்களில் பயணிகளை ஏற்றுவதாக புகார்கள் எழுந்தன. இந்நிலையில், சட்டத்திற்கு புறம்பாக வெள்ளை பதிவெண் கொண்ட சொந்த வாகனங்களை வாடகைக்கு பயன்படுத்தினால் ₹25,000 அபராதம் விதிக்கப்படும் என போக்குவரத்து துறை எச்சரித்துள்ளது. சுங்கச்சாவடிகளில் வாகனங்களை தீவிரமாக கண்காணிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
News October 17, 2025
கிரிக்கெட் வீரர்களின் மூட நம்பிக்கைகள்: PHOTOS

கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்கள் தங்கள் ஆட்டத்திறனை மேம்படுத்துவதற்காக சில நம்பிக்கைகளை பின்பற்றுவது வழக்கம். அவற்றில் பெரும்பாலும் மூட நம்பிக்கைகள் என்றாலும், தங்களின் மன திருப்திக்காக அதை விடாமல் அவர்கள் பிடித்து கொண்டிருப்பார்கள். பிரபல பேட்ஸ்மேன்களின் நம்பிக்கைகள், மூட நம்பிக்கைகள், பழக்க வழக்கங்களை இங்கே போட்டோக்களாக கொடுத்துள்ளோம். ஸ்வைப் செய்து பாருங்க. உங்களுக்கும் அப்படி ஏதாவது இருக்கா?