News April 16, 2024
பிரபல நடிகர் துவராகீஷ் காலமானார்

பிரபல கன்னட நடிகர் துவராகீஷ் (81) மாரடைப்பு ஏற்பட்டு இன்று காலமானார். கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் கிழக்கு ஆப்பிரிக்காவில் ஷீலா என்ற படத்தை இயக்கி நடித்த இவர், ரஜினியுடன் நான் அடிமை இல்லை, அடுத்த வாரிசு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அவரது மறைவிற்கு திரை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Similar News
News August 17, 2025
ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்: ECI

வாக்கு திருட்டு தொடர்பான குற்றச்சாட்டிற்கு விளக்கமளித்த தேர்தல் ஆணையம், ராகுலின் குற்றச்சாட்டு அரசியலமைப்பை அவமதிப்பதாக தெரிவித்துள்ளது. ராகுல் வாக்காளர்களின் போட்டோக்களை அனுமதியில்லாமல் பயன்படுத்தியதாகவும் குற்றம்சாட்டியுள்ளது. இதனால், 1 வாரத்தில் குற்றச்சாட்டு பற்றி ராகுல் பிரமாண பத்திரம் ஒன்றை சமர்பிக்க வேண்டும் அல்லது நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
News August 17, 2025
2026 வெற்றிக்கு ராமதாஸிடம் பெரிய திட்டம்: GK மணி

குலதெய்வம் என கூறி கொண்டே சிலர் முதுகில் குத்துவதாக GK மணி விமர்சித்துள்ளார். பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அவர், பாமகவுக்கு தற்போது சோதனை காலம் எனவும், அதிலிருந்து மீளும் ஐடியா அய்யாவுக்கு(ராமதாஸுக்கு) தெரியும் என்றும் கூறினார். மேலும், 2026 தேர்தலில் அதிக தொகுதிகளில் பாமக வெற்றி பெற்றால் மட்டுமே வன்னியர் மக்களுக்கு விடிவு காலம் எனக் கூறிய அவர், ராமதாஸிடம் அதற்கு பெரிய திட்டம் உள்ளது என்றார்.
News August 17, 2025
சச்சின் சிறந்த பேட்டர்.. கிரேட் பிளேயர் இல்லை: ஸ்மித்

கிரிக்கெட் வரலாற்றின் மிகச்சிறந்த வீரர் யார் என்ற கேள்விக்கு SA-வின் ஜாக் காலிஸ்தான் என பதிலளித்து விவாதத்தை கிளப்பியுள்ளார் AUS வீரர் ஸ்டீவ் ஸ்மித். சச்சின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்தான், ஆல்ரவுண்டராக இருந்தாலும் அவர் பெரும்பாலும் பேட்டிங்கிலேயே கவனம் செலுத்தினார். ஆனால், காலிஸ் பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் சாதனை படைத்ததால், ஸ்மித் இவ்வாறு தெரிவித்துள்ளதாக நெட்டிசன்கள் குறிப்பிடுகின்றனர்.