News October 13, 2025

கரூர்: ரயில்வே துறையில் சூப்பர் வேலை!

image

கரூர் மக்களே.., இந்திய ரயில்வேயில் பணிபுரிய ஆசையா..? தற்போது காலியாக உள்ள 368 ’Section Controller’ பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தா போதுமானது. மாதம் ரூ.35,400 சம்பளம் வழங்கப்படும். இதில் பணிபுரிய விருப்பமுள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க <>இங்கே கிளிக் <<>>பண்ணுங்க. விண்ணப்பிக்க நாளையே(அக்.14) கடைசி நாள். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்

Similar News

News November 8, 2025

108 ஆம்புலன்ஸ் மோதி நடந்த சென்ற மூதாட்டி பலத்த காயம்

image

கரூர் சேமாங்கி பகுதியைச் சேர்ந்தவர் இளஞ்சியம் 64. இவர் நேற்று கரூர் மனோகரா கார்னர் சாலையில் நடந்து சென்ற போது மனோஜ் குமார் ஓட்டி வந்த 108 ஆம்புலன்ஸ் மோதியதில் இளஞ்சியம் படுகாயம் அடைந்து கரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். அவரின் மகள் புனிதா புகாரில் கரூர் நகர போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 8, 2025

அறிவித்தார் கரூர் கலெக்டர்

image

கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், ஆசிரியர் தேர்வு வாரியம் -2025 (TET-I, TET-II) ஆசிரியர் தகுதித் தேர்விற்கான மண்டல அளவிலான மாதிரி தேர்வு இன்று 08.11.2025 நடைபெறவுள்ளது என கலெக்டர் மீ.தங்கவேல் கூறியுள்ளார்.(https://www.trb.tn.gov.in) மேலும் இந்த இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என அறிவித்துள்ளார்.

News November 8, 2025

வாலிபரிடம் பட்டாக்கத்தியை காட்டி வழிப்பறி!

image

கரூர் மாவட்டம் மேட்டு மகாதானபுரத்தை சேர்ந்தவர் சத்தியபாலா மகன் ஹரிஷ் (19). இவர் நேற்று லாலாபேட்டை மேம்பாலம் அருகே தனது பைக்குடன் நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த சசிகுமார் (23) என்பவர் மறைத்து வைத்திருந்த பட்டாக்கத்தியை கழுத்தில் வைத்து மிரட்டி பாக்கெட்டில் வைத்திருந்த ரூ.4000 பறித்து கொண்டு சென்றுவிட்டார். புகாரின் பேரில் லாலாபேட்டை போலீசார் வழக்கு பதிந்து சசிகுமாரை கைது செய்தனர்.

error: Content is protected !!