News April 16, 2024
மோடிக்கு எதிராக வேட்பாளரை நிறுத்தியது பகுஜன் சமாஜ்

வாரணாசி தொகுதிக்கு வேட்பாளரை மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி அறிவித்துள்ளது. மக்களவைத் தேர்தலில் உத்தர பிரதேசத்தில் கூட்டணி அமைக்காமல் பகுஜன் சமாஜ் தனித்து போட்டியிடுகிறது. அக்கட்சி இன்று 11 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. அதில் வாரணாசி தொகுதியில் போட்டியிடும் மோடிக்கு எதிரான வேட்பாளராக அதார் ஜமால் லரியா என்பவரை வேட்பாளராக அறிவித்துள்ளது.
Similar News
News December 9, 2025
திமுக அரசை தூக்கி அடிப்போம்: ஹெச்.ராஜா

திமுக அரசு இந்து விரோத அரசாக செயல்பட்டு வருகிறது என ஹெச்.ராஜா சாடியுள்ளார். வரும் தேர்தலில் முக்கிய சாராம்சமாக திருப்பரங்குன்றம் பிரச்னை தான் இருக்கும் என்ற அவர், இதன் மூலம் திமுக அரசை தூக்கி அடிப்போம் என தெரிவித்துள்ளார். அத்துடன், வரும் 12-ம் தேதிக்குள் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றப்பட வேண்டும் எனவும் கெடு விதித்துள்ளார்.
News December 9, 2025
செங்கோட்டையனின் அண்ணன் மகன் அதிமுகவில் இணைகிறார்

செங்கோட்டையனின் சொந்த அண்ணன் மகன் கே.கே.செல்வம் திமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். ஈரோடு திமுக வடக்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளராக இருந்த அவர் கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக திமுக தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது. இதனையடுத்து, அவர் மீண்டும் அதிமுகவில் இணைகிறேன் என்று அறிவித்துள்ளார். கோபியில் செங்கோட்டையனுக்கு எதிராக செல்வத்தை அதிமுக களமிறக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
News December 9, 2025
மூட்டு வலியை விரட்டும் அற்புத மூலிகை எண்ணெய்

சித்த மருத்துவர்களின் அறிவுரையின்படி, ➤ஆமணக்கு எண்ணெய் மூட்டு & தசை வலியைப் போக்க சிறந்தது. மேலும், முகப்பரு, தோல் வறட்சி, முடி வளர்ச்சி போன்ற பிரச்னைகளுக்கு சிறந்த தீர்வாக இருக்கிறது. ➤கண்கள் சிவந்திருந்தால், இந்த எண்ணெய்யை 2 துளி கண்களில் விட குணமாகும். ➤ஆமணக்கு இலையுடன் கீழாநெல்லி இலையை சேர்த்து அரைத்து, எலுமிச்சம்பழம் அளவிற்கு காலையில் சாப்பிட்டு வந்தால், மஞ்சள் காமாலை குணமாகும். SHARE.


