News October 13, 2025

BREAKING: அமைச்சர் பதவியில் இருந்து விலகுகிறார்

image

மத்திய பெட்ரோலியம், சுற்றுலாத்துறை இணையமைச்சர் சுரேஷ் கோபி பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளார். தனக்கு மாற்றாக ராஜ்யசபா MP சதானந்தன் மாஸ்டரை அமைச்சராக்க வேண்டும் எனவும், இதன் மூலம் கேரள அரசியலில் திருப்புமுனை ஏற்படும் என்றும் பாஜக தலைமைக்கு வலியுறுத்தியுள்ளார். ஏற்கெனவே அவர் <<17988400>>அமைச்சராக இருக்க விரும்பவில்லை<<>> என தலைமையிடம் கூறியிருந்ததால், டெல்லி மேலிடம் இதுகுறித்து ஆலோசனையில் இறங்கியுள்ளதாம்.

Similar News

News March 14, 2026

BREAKING: விஜய்க்கு முதலிடம்.. புதிய கருத்துக்கணிப்பு

image

லயோலா(IPDS) கருத்துக்கணிப்பில், இளைஞர்களின் நம்.1 தேர்வாக விஜய் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக, விசிக, நாதக, அதிமுக, பாஜக என்ற வரிசையில் பிற கட்சிகளின் வாக்குகளை விஜய் உடைப்பார் என கூறப்பட்டுள்ளது. அடுத்த முதல்வருக்கான ரேஸில் CM ஸ்டாலினை விஜய் நெருங்கிவிட்டதாகவும், நகர்ப்புறங்களில் திமுக கூட்டணிக்கு 24.77%, தவெகவுக்கு 23.44% மக்கள் ஆதரவு இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

News March 14, 2026

வங்கி கணக்கில் ₹25,000.. அரசு அறிவிப்பு FACTCHECK

image

PM Laptop Scheme 2026 திட்டத்தின் மூலம் அனைத்து மாணவர்களுக்கும் இலவச லேப்டாப் (அ) ₹25,000 வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளதாக SM-ல் தகவல் பரவி வருகிறது. ‘CareerNotify18’ என்ற யூடியூப் சேனலில் வெளியான இந்த தகவல் பொய்யானது என மத்திய அரசின் உண்மை சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது. myscheme.gov.in. இணையதளம் சென்று அதிகாரப்பூர்வ தகவல்களை அறிந்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 14, 2026

எண்ணெய் கப்பல்களுக்கு ஈரானின் புது ரூல்ஸ்

image

டாலருக்கு பதிலாக சீன யுவானில் எண்ணெய் வர்த்தகம் மேற்கொள்ள வேண்டுமென ஈரான் நிபந்தனை விதித்துள்ளதாக கூறப்படுகிறது. அப்படி செய்தால் மட்டுமே சில எண்ணெய் கப்பல்கள் ஹார்முஸ் நீரிணை வழியே செல்வதற்கு அனுமதிக்க முடிவு செய்துள்ளதாக CNN செய்தி வெளியிட்டுள்ளது. தற்போது எண்ணெய் வணிகம் டாலரில் மட்டுமே நடைபெறுவதால், டாலர் சக்திவாய்ந்த கரன்சியாக உள்ளது. ஈரானின் முடிவு டாலர் ஆதிக்கத்திற்கு சவால் விடுத்துள்ளது.

error: Content is protected !!