News October 13, 2025
2026 தேர்தல் பிரசார களம் எதை நோக்கி செல்கிறது?

சட்டப்பேரவை தேர்தலுக்கு 8 மாதங்களுக்கு முன்பே தமிழக தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. நேற்று முதல் பாஜகவும் பிரசாரத்தை துவங்கியுள்ளது. ஆளும் திமுக அரசும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ போன்ற திட்டங்கள் மூலம் நேரடியாக மக்களை சந்திக்கிறது. இந்நிலையில், அரசியல் கட்சிகளின் பிரசார வாகனங்கள், அவர்களின் முழக்கங்களை மேலே swipe செய்து பாருங்கள். எந்த கட்சியின் பிரசாரம் உங்களை ஈர்க்கிறது என்று கமெண்ட்டில் சொல்லுங்க.
Similar News
News March 4, 2026
ஈரான் தாக்கு பிடித்தால் அமெரிக்காவுக்கு பெரும் சிக்கல்

உச்ச தலைவர் கமேனியின் மரணத்திற்கு பிறகு ஈரான் சரணடையாமல் அதன் தாக்குதல்களை மேலும் தீவிரப்படுத்தி வருகிறது. இந்தப் போர் 4 வாரங்களில் முடிவடையும் என்று டிரம்ப் கூறினாலும், அது நீளும் என அரசியல் விமர்சகர்கள் கணிக்கின்றனர். ஈரான் மீதான தாக்குதல்கள் இன்னும் 10 நாள்களுக்குத் தொடர்ந்தால், அமெரிக்காவின் முக்கியமான ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகளின் இருப்பு குறைந்து போகக்கூடும் என்று பென்டகன் எச்சரித்துள்ளது.
News March 4, 2026
விஜய் என்னை எட்டி உதைத்தார்.. பரபரப்பு பதிவு

விஜய்யின் Ex உதவியாளர் டி.ஆர்.ரமேஷ் அளித்த பேட்டி தற்போது வைரலாகிறது. அதில், விஜய் ஒருநாள் கோபமாக போனில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவருக்கு சாப்பாடு பரிமாறினேன். உணவில் ஒரு முடி இருந்ததற்காக என்னை எட்டி உதைத்து கீழே தள்ளிவிட்டார். இது எனக்கு மிகுந்த வருத்தமளித்தது. ஆனால், மறுநாள் கூட இதற்காக என்னிடம் அவர் மன்னிப்பு கேட்கவில்லை என தெரிவித்துள்ளார். இந்த பதிவை தற்போது பலரும் பகிர்கின்றனர்.
News March 4, 2026
திமுக + காங்கிரஸ்.. கூட்டணியில் மாற்றம்

திமுக – காங்., கூட்டணி இழுபறி நிலையிலேயே நீடிக்கிறது. ப.சிதம்பரம், செல்வப்பெருந்தகை என முக்கிய தலைகள் நேற்று அறிவாலயம் நோக்கி அடுத்தடுத்து விரைந்ததும் கூட்டணி முடிவாகும் என கூறப்பட்டது. முன்னதாக, 25 தொகுதிகள் கொடுக்கவே திமுக தயாராக இருந்தது. இந்நிலையில், திடீர் மாற்றமாக 28 + 1 தொகுதி அளிக்க திமுக முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் சற்றுநேரத்தில் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகவுள்ளதாம்.


