News October 13, 2025
கிருஷ்ணகிரியில் கரண்ட் கட்!

கிருஷ்ணகிரி, உத்தனப்பள்ளி துணைமின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக நாகொண்டப்பள்ளி, கோபனப்பள்ளி, கூலிசந்திரம், முதுகனப்பள்ளி, செட்டிப்பள்ளி, மாசிநாயக்கனப்பள்ளி, உத்தனப்பள்ளி, அகரம், தியானதுர்கம், நாகமங்கலம், நல்லராலப்பள்ளி, பீர்ஜேப்பள்ளி, உள்ளுக்குறுக்கை ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர்.
Similar News
News October 14, 2025
கிருஷ்ணகிரியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்!

கிருஷ்ணகிரியில் (அக்-14) உங்களுடன் ஸ்டாலின் முகம் நடைபெறும் இடங்கள். 1)ஓசூர்- விபிஆர்சி பில்டிங் திருப்பதி மெஜஸ்டிக் சென்னசத்திரம். 2) தளி- டி. கொத்தனூர் அரசு மேல்நிலைப்பள்ளி (அரசகுப்பம்) 3) ஊத்தங்கரை- கோனம்பட்டி அரசு உயர்நிலை பள்ளி. 4) காவேரிப்பட்டினம் – அரசம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி. 5) பர்கூர்- (அஞ்சூர் மகேஸ்வரி மஹால்) 6) சூளகிரி – கதிரிபள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி.
News October 14, 2025
கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை!

கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை வழங்கியுள்ளது. “அதிக விலை பொருட்கள் குறைந்த விலையில்”, “கொரியர் மூலமாக பரிசு பொருட்கள் பணம் கட்ட சொல்லுதல்” போன்ற மோசடிகளை நம்ப வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் ஆஃபர்கள், குறுஞ்செய்திகள், லிங்குகள் & அழைப்புகள் மூலம் பணம் செலுத்தி ஏமாறாதீர்கள். ஏமாற்றப்பட்டால் உடனே 1930ல் சைபர் கிரைம் புகார் செய்யலாம்.
News October 14, 2025
கிருஷ்ணகிரி மாவட்ட இரவு நேர ரோந்து பணி விவரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று (அக்.13) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க