News October 13, 2025
திமுக கூட்டணியில் இருந்து இந்த கட்சி விலகலா?

கூட்டணியில் உரிய அங்கீகாரம் கிடைக்காவிட்டால் 2026-ல் தனித்து போட்டியிட தயார் என வேல்முருகன் அறிவித்துள்ளார். 2021 தேர்தல் வெற்றிக்குப்பின், திமுகவுக்கும், வேல்முருகனுக்கும் இடையே அவ்வப்போது மோதல் வெடிக்கும். இதனால், திமுக கூட்டணியில் இருந்து அவர் வெளியேற வாய்ப்புள்ளதாக அடிக்கடி செய்திகளும் வெளியாகும். இந்நிலையில் ‘தனித்து போட்டி’ என அவர் கூறியது, கூட்டணியில் இருந்து விலகலா என கேள்வி எழுந்துள்ளது.
Similar News
News October 13, 2025
ஃப்ரிட்ஜ் இல்லாமல் காய்கறிகள் ஃப்ரஷ்ஷாக இருக்கணுமா?

ஃப்ரிட்ஜ் இல்லாமல் காய்கறிகள் நீண்ட நாள்கள் நீடிக்காமல் கீழே போட வேண்டிய சூழல் ஏற்படுகிறதா? இனி கவலை வேண்டாம். உங்களுக்காகவே ஃப்ரிட்ஜ் இல்லாமல் காய்கறிகளை எப்படி ஃப்ரெஷ்ஷாகவே வைத்துக்கொள்ளலாம் என்று மேலே உள்ள போட்டோக்களில் கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றை swipe செய்து பாருங்கள். உங்களுக்கு தெரிந்த டிப்ஸையும் கமெண்ட்டில் சொல்லுங்கள். ஷேர் பண்ணுங்க.
News October 13, 2025
பிடிவாதம் தொடர்ந்தால் பதிலடி நிச்சயம்: சீனா

வரி விதிப்பு நடவடிக்கைகளில் அமெரிக்கா பிடிவாதமாக இருந்தால், பதிலடி கொடுக்கப்படும் என்று சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. டிரம்ப்பின் 100% வரி குறித்து பதிலளித்துள்ள சீனா, தாங்கள் வரிப் போரை விரும்பவில்லை என்றும், ஆனால் அது குறித்து பயமில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது. அமெரிக்கா, அச்சுறுத்தல்களுக்கு பதிலாக பேச்சுவார்த்தை மூலம் வேறுபாடுகளை தீர்க்க வேண்டும் என்றும் சீனா வலியுறுத்தியுள்ளது.
News October 13, 2025
கரூர் வழக்கு: சிறப்புக் குழுவுக்கு SC விதித்த கட்டுப்பாடு?

கரூர் வழக்கை CBI விசாரிக்க உத்தரவிட்டுள்ள அதேவேளையில், அதனை கண்காணிக்க ஓய்வு பெற்ற SC நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் உள்ள 2 ஐபிஎஸ் அதிகாரிகள் தமிழ்நாட்டில் பிறந்தவர்களாக இருக்கக்கூடாது என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. மேலும், மாதம் ஒருமுறை விசாரணை அறிக்கையை SC-ல் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் ஜே.கே மகேஸ்வரி, அன்ஜாரியா ஆணையிட்டுள்ளனர்.