News October 13, 2025
கரூர் விவகாரம் களமிறங்கிய புதிய போலீஸ்!

கரூர் வேலுச்சாமி புரத்தில் நடந்த துயர சம்பவத்தை தொடர்ந்து எஸ்ஐடி குழுவினர் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். இந்நிலையில் கூடுதலாக திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கருண்கரட் விசாரணை குழுவில் சேர்க்கப்பட்டு இன்று கரூர் வருகை தந்துள்ளார். மேலும் வடக்கு மாவட்டங்களில் இருந்து கூடுதலாக காவல் ஆய்வாளர்கள், உதவி காவல் ஆய்வாளர்கள் குழுவில் சேர்ந்துள்ளனர்.
Similar News
News November 8, 2025
108 ஆம்புலன்ஸ் மோதி நடந்த சென்ற மூதாட்டி பலத்த காயம்

கரூர் சேமாங்கி பகுதியைச் சேர்ந்தவர் இளஞ்சியம் 64. இவர் நேற்று கரூர் மனோகரா கார்னர் சாலையில் நடந்து சென்ற போது மனோஜ் குமார் ஓட்டி வந்த 108 ஆம்புலன்ஸ் மோதியதில் இளஞ்சியம் படுகாயம் அடைந்து கரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். அவரின் மகள் புனிதா புகாரில் கரூர் நகர போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 8, 2025
அறிவித்தார் கரூர் கலெக்டர்

கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், ஆசிரியர் தேர்வு வாரியம் -2025 (TET-I, TET-II) ஆசிரியர் தகுதித் தேர்விற்கான மண்டல அளவிலான மாதிரி தேர்வு இன்று 08.11.2025 நடைபெறவுள்ளது என கலெக்டர் மீ.தங்கவேல் கூறியுள்ளார்.(https://www.trb.tn.gov.in) மேலும் இந்த இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என அறிவித்துள்ளார்.
News November 8, 2025
வாலிபரிடம் பட்டாக்கத்தியை காட்டி வழிப்பறி!

கரூர் மாவட்டம் மேட்டு மகாதானபுரத்தை சேர்ந்தவர் சத்தியபாலா மகன் ஹரிஷ் (19). இவர் நேற்று லாலாபேட்டை மேம்பாலம் அருகே தனது பைக்குடன் நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த சசிகுமார் (23) என்பவர் மறைத்து வைத்திருந்த பட்டாக்கத்தியை கழுத்தில் வைத்து மிரட்டி பாக்கெட்டில் வைத்திருந்த ரூ.4000 பறித்து கொண்டு சென்றுவிட்டார். புகாரின் பேரில் லாலாபேட்டை போலீசார் வழக்கு பதிந்து சசிகுமாரை கைது செய்தனர்.


