News October 13, 2025
கடலூர்: ஆசிரியையிடம் கைவரிசை

பண்ருட்டி அடுத்த அரசடிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் வனிதா (50). இவர் அரசடிகுப்பத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் சத்துணவு ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை வனிதா காட்டுப்பாளையம் சாலையில் சென்றபோது பின் தொடர்ந்து வந்த நபர், அவர் அணிந்திருந்த 4.5 பவுன் தங்க சங்கிலியை பறித்து தப்பி சென்றார். இதுகுறித்து காடம்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Similar News
News March 7, 2026
கடலூர்: ரயில்வேயில் வேலை- தேர்வு கிடையாது!

ரயில்வே துறையில் காலியாக உள்ள 5349 (Apprentice) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 10th அல்லது ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் வருகிற மார்ச் 23-ம் தேதிக்குள்<
News March 7, 2026
அரசுக்கு கண்டனம் தெரிவித்த MLA

பண்ருட்டி MLA வேல்முருகன் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், தமிழக கேரள எல்லைப் பகுதியில், கூடலூர் அருகே தமிழக அரசின் ஒப்புதலின்றி கேரள அரசு ஒருதலைப்பட்சமாக எல்லை அறிவிப்புப் பலகைகளை நட்டுள்ள செய்தி, பேரதிர்ச்சியையும் மிகுந்த மனவேதனையையும் அளிக்கிறது. அண்டை மாநிலங்கள் பேண வேண்டிய கண்ணியத்தையும், ஜனநாயக மரபுகளையும் காலில் போட்டு மிதிக்கும் இச்செயலை தவாக வன்மையாகக் கண்டிக்கிறது என தெரிவித்தார்.
News March 7, 2026
விருத்தாசலம் டிஎஸ்பி-க்கு சான்றிதழ் வழங்கிய எஸ்பி

கடலூர் மாவட்டத்திலேயே குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களை விரைந்து பிடிப்பதில் சிறந்த போலீஸ் நிலைய உட்கோட்டமாக விருத்தாசலம் உட்கோட்டமும், சிறந்த போலீஸ் நிலையமாக விருத்தாசலம் போலீஸ் நிலையமும் தேர்ந்தெடுக்கப்பட்டது. இதையடுத்து மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் நேற்று விருத்தாசலம் டி.எஸ்.பி. பாலகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் பிரதாப் சந்திரன் ஆகியோரை பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.


