News October 13, 2025
₹1.35 லட்சம் வரை ஆஃபர் அறிவித்த டாடா

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெட்ரோல், டீசல், EV உள்ளிட்ட அனைத்து கார்களின் விலையையும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் குறைத்துள்ளது. குறைந்தபட்சம் ₹25,000-ல் தொடங்கி அதிகபட்சமாக ₹1.35 லட்சம் வரை ஆஃபர் அறிவித்துள்ளது. குறிப்பிட்ட வேரியண்ட்களுக்கு ரொக்க தள்ளுபடி, பரிமாற்றம், லாயல்டி போனஸும் வழங்கப்படுகிறது. வரும் 21-ம் தேதி வரை மட்டுமே இந்த ஆஃபர் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News October 13, 2025
கரூர் வழக்கு: சிறப்புக் குழுவுக்கு SC விதித்த கட்டுப்பாடு?

கரூர் வழக்கை CBI விசாரிக்க உத்தரவிட்டுள்ள அதேவேளையில், அதனை கண்காணிக்க ஓய்வு பெற்ற SC நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் உள்ள 2 ஐபிஎஸ் அதிகாரிகள் தமிழ்நாட்டில் பிறந்தவர்களாக இருக்கக்கூடாது என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. மேலும், மாதம் ஒருமுறை விசாரணை அறிக்கையை SC-ல் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் ஜே.கே மகேஸ்வரி, அன்ஜாரியா ஆணையிட்டுள்ளனர்.
News October 13, 2025
11-ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து: என்னென்ன மாற்றங்கள்?

11-ம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது நடப்பு கல்வியாண்டு (2025-26) முதலே அமலுக்கு வருகிறது. எனவே 2017-18 கல்வியாண்டிற்கு முன்பு இருந்த, பள்ளிகள் மூலம் தேர்வுகள் நடத்தும் முறை பின்பற்றப்படும். இனி 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் மட்டும் தனியாக வழங்கப்படும். 11-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள், 2030-க்குள் அரியர் தேர்வை எழுதிக் கொள்ளலாம்.
News October 13, 2025
ஆளுக்கொரு பொண்டாட்டி இலவச சர்ச்சை: விளக்கம்

அதிமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில், இலவசமாக மிக்ஸி, கிரைண்டர், ஆடு, மாடு, ஏன் ஆளுக்கு ஒரு பொண்டாட்டியையும், ஓட்டு போட்டால் இலவசமாக கொடுப்பாங்க என்று சி.வி.சண்முகம் பேசியதாக செய்திகள் வெளியானது. இந்நிலையில், இந்த செய்தி முற்றிலும் தவறானது என விளக்கமளித்துள்ள அதிமுக, விஷமத்தனமான நோக்கத்தோடு அவதூறு பரப்புவோர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.