News October 13, 2025

BREAKING: விஜயகாந்த் வீட்டில் பரபரப்பு

image

சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரேமலதா விஜயகாந்தின் வீடு, தேமுதிக அலுவலகத்தில் வெடிகுண்டு இருப்பதாக இ-மெயில் வந்ததை அடுத்து நள்ளிரவில் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக மோப்ப நாயுடன், வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் விஜயகாந்த் வீட்டில் சோதனையில் ஈடுபட்டனர். பின்னர், அது புரளி என தெரியவந்துள்ளது. நேற்று முன்தினம், CM ஸ்டாலின், ரஜினிகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Similar News

News March 3, 2026

கேவலம்: சஞ்சுவுக்கு எதிராக இனவெறி கருத்து!

image

WI அணிக்கு எதிரான வாழ்வா? சாவா? ஆட்டத்தில் இந்திய அணியை சஞ்சு சாம்சன் கரைசேர்த்தார். அவரை ஒட்டுமொத்த நாடும் கொண்டாடி வரும் நிலையில், X தளத்தில், கருப்பானவரால் தான், கருப்பினத்தவர்களை வீழ்த்த முடியும் என மிகவும் கேவலமான ஒருவர் பதிவிட்டிருந்தார். இந்திய ரசிகர்கள் பலரும் அவரை கடுமையாக கண்டித்த நிலையில், அப்பதிவு தற்போது டெலிட் செய்யப்பட்டுள்ளது. இவர்களையெல்லாம் என்ன செய்வது?

News March 3, 2026

முன்னாள் மத்திய அமைச்சர் காலமானார்

image

மூத்த காங்., தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான கே.பி. உன்னிகிருஷ்ணன் (90) காலமானார். கோழிக்கோடு வடகரா தொகுதியில் இருந்து தொடர்ந்து 6 முறை (1971-1996) MP-ஆக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், வி.பி.சிங் அமைச்சரவையில் (1989-90) மத்திய தொலைத்தொடர்பு, கப்பல் மற்றும் தரைவழி போக்குவரத்து துறை அமைச்சராகப் பணியாற்றினார். வளைகுடா போரின்போது இந்தியர்களை மீட்கும் நடவடிக்கையில் முக்கியப் பங்காற்றியவர்.

News March 3, 2026

திமுக ஆட்சி தூக்கி எறியப்படுவது உறுதி: விஜய்

image

நெல்லையில் 9 பேர் கொண்ட கும்பல் தாக்கியதில் 2 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தியாவின் டாப் மாநிலத்தில்
சட்டம் ஒழுங்கு டிஜிபி எங்கே என கேள்வியெழுப்பியுள்ள அவர், போதை கும்பல் சுதந்திரமாக வன்முறை நிகழ்த்த இடம் தந்த பொறுப்புமிக்க ஆட்சி இதுதானா என்றும் கேட்டுள்ளார். மக்கள் நலனை பற்றி யோசிக்காத திமுக ஆட்சி, தேர்தலில் தூக்கி எறியப்படுவது உறுதி என்றும் சூளுரைத்துள்ளார்.

error: Content is protected !!