News October 13, 2025
கள்ளக்குறிச்சி: சிறுமிக்கு திருமணம்;வியாபாரி மீது வழக்கு

உளுந்துார்பேட்டை, செங்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யனார் (26) பழ வியாபாரி. இவர், விருதாச்சலம் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை காதலித்து கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டார். அப்பெண் தற்போது மூன்று மாத கர்ப்பமாக உள்ளார். மருத்துவ பரிசோதனைக்காக சிறுமியை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில் டாக்டர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News March 8, 2026
கள்ளக்குறிச்சி: இந்த கார்டு இருந்தால் மாதம் ரூ.3000

இ-ஷ்ரம் அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்குள் உள்ள, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் பெறலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். PM-SYM மூலம் 60 வயதுக்கு பின் ரூ.3,000 மாத பென்ஷன் பெறலாம். ஆதார், மொபைல் எண் வங்கி விவரங்களுடன் <
News March 8, 2026
கள்ளக்குறிச்சி: மகளிருக்கு இந்த எண் அவசியம்!

கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களே.., மகளிர் பாதுகாபிற்காக அரசு சார்பாக அரசு அறிமுகப்படுத்திய செயலி காவல் உதவி. வேலைக்கு செல்லும் பெண்கள் ஏதேனும் பாதுகாப்பு இல்லை என உணர்ந்தால் இந்த செயலியில் உள்ள பொத்தானை அமுக்கினால் போதும், போலீஸ் உதவி உங்களைத் தேடி வரும். மேலும், குடும்பத்தில், பணியிடத்தில் அச்சுறுத்தல், வன்முறை நிகழ்ந்தால் உடனே 181-ஐ அழைக்கலாம். இந்தத் தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News March 8, 2026
கள்ளக்குறிச்சியில் தூக்கிட்டு தற்கொலை!

கச்சிராயப்பாளையம் அருகே உள்ள தாவடிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் வேலு. இவரது மனைவி சித்ரா(44). இவருடைய கணவர் வேலு கடந்த 22 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால், குடும்ப செலவிற்கு பணம் இல்லாததால் சித்ரா அக்கம்பக்கத்தினரிடம் கடன் வாங்கியதாகத் தெரிகிறது. வாங்கிய பணத்தை அடைக்க முடியாததால் மனமுடைந்த சித்ரா, தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.


