News October 13, 2025

திருத்தணி முருகன் கோயிலில் அவலம்

image

திருத்தணி முருகன் கோயிலில், முடி காணிக்கை மண்டபத்தில், ஆறு மாதமாக சுடு தண்ணீர் வழங்கும், ‘வாட்டர் ஹீட்டர்’ இயந்திரம் பழுதாகி உள்ளதால் பக்தர்கள் சிரமப்படுகின்றனர். பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்ற முடிகாணிக்கை செலுத்துகின்றனர். மேலும், குழந்தைகளுக்கு முதல் முறையாக முடி காணிக்கையும் செலுத்துகின்றனர். இந்நிலையில், குளிக்க வசதி இல்லை என்ற குற்றசாட்டு எழுந்துள்ளது.

Similar News

News October 30, 2025

புத்த, சமண, சீக்கிய மதத்தினர் யாத்திரை செல்ல மானியம்

image

திருவள்ளூர்: தமிழ்நாட்டைச் சார்ந்த 50 புத்த மதத்தினர் 50 சமண மதத்தினர் 20 சீக்கிய மதத்தினர் யாத்திரை மானியமாக சுமார் ஒரு நபருக்கு ரூ10,000விதம் 12 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் பயன்பெற நவ.30ம் தேதிக்குள் www.bcmbcmw.tn.gov.in என்ற இணையதளத்தில் மனுக்களை பதிவிறக்கம் செய்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நல அலுவலகத்தில் விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News October 30, 2025

திருவள்ளூர்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று (அக்.29) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News October 29, 2025

திருவள்ளூர்: SIR குறித்து ஆலோசனை கூட்டம்

image

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், இன்று (அக்.29) வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் சீராய்வு விளக்க கூட்டம் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தலைமையில் நடைபெற்றது. இதில் அனைத்து கட்சி சார்பான பிரதிநிதிகளும் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.

error: Content is protected !!