News October 13, 2025
காரைக்குடி ரயில் பயணிகளுக்கு ஓர் நற்செய்தி

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி சந்திப்பு ரயில் நிலையத்தில் AC காத்திருப்பு அறை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இதில் 1 நபருக்கு, 1 மணி நேரத்திற்கு ரூ.30 மட்டுமே கட்டணம். இந்த AC அறை நடைமேடை 1 இல் அமைந்துள்ளது. ரயிலுக்கு காத்திருக்கும் பயணிகள் இதனை காரைக்குடி சந்திப்பு நிலையத்தில் பயன்படுத்தி கொள்ளலாம்.
Similar News
News March 14, 2026
சிவகங்கை: பெண்ணை மிரட்டி ரூ.80 லட்சம் பறிப்பு; போலீஸ் கைது.!

விருதுநகர், ஆமாத்தூரைச் சேர்ந்த ஏட்டு சுந்தர்ராஜ் (35) என்பவர், விருதுநகரைச் சேர்ந்த கணவரை இழந்த பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வாரத்தை கூறி பெண்ணுடன் தனிமையில் இருந்துள்ளார். மேலும் அவரது மகளை டாக்டருக்கு படிக்க வைப்பதாக கூறி ரூ.80 லட்சம் வரை பெற்று மோசடி செய்துள்ளார். இது குறித்த புகாரில் அவர் ஏற்கனவே சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்த நிலையில், நேற்று சிவகங்கையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இரவு ரோந்து பணிக்கு நியமித்துள்ள அதிகாரிகள் விவரம்

சிவகங்கை மாவட்டத்தில் கொலை, கொள்ளை உள்ளிட்ட அசம்பாவிதமான சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க மாவட்ட காவல் காவல்துறை சார்பில், மாவட்ட கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில் போலீசார் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக இன்று இரவு (13.03.26) ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.