News October 13, 2025
திருப்பத்தூர் மக்களுக்கு வேண்டுகோள்!

திருப்பத்தூர் மாவட்ட காவல் துறையினரின் ஆணைக்கிணங்க பொதுமக்கள், பண்டிகை காலங்களில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எனவும், அதிக அளவில் கூட்ட நெரிசல் ஏற்படும் இடத்திற்கு செல்வதை பொதுமக்கள் குறைக்க வேண்டும் எனவும் காவல்துறை அறிவுறுத்துகிறது. மேலும் அதிக கூட்டம் இருக்கும் இடங்களில் குழந்தைகளை அழைத்து செல்வதையும் தவிர்க்கவேண்டும் எனவும் வலியுறுத்திகிறார்கள்.
Similar News
News March 14, 2026
திருப்பத்தூர் வருகிறார் துணை முதல்வர்!

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று திருப்பத்தூர் மாவட்டத்திற்கு வருகை தருகிறார். பாதுகாப்பு காரணங்களுக்காக இன்று ஒரு நாள் முழுவதும் மாவட்டம் முழுவதும் ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா வானூர்திகள் பறக்க மாவட்ட ஆட்சியர் சிவசவுந்தரவள்ளி தடை விதித்துள்ளார். தடையை மீறுபவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
News March 14, 2026
திருப்பத்தூர்: பாலாற்றில் ஆண் சடலம் மீட்பு

வாணியம்பாடி அருகே மேட்டுப்பாளையம் பாலாற்றுப் பகுதியில் இன்று (13.03.2026) அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் இறந்து கிடப்பதாகப் பொதுமக்கள் தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த வாணியம்பாடி கிராமியக் காவல்துறையினர், உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்தவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்துப் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
News March 14, 2026
திருப்பத்தூர்: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 -க்கு டயல் செய்யலாம். மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


