News April 16, 2024
அண்ணனுக்கு வாக்கு சேகரித்த தம்பி

தேமுதிக விருதுநகர் தொகுதி வேட்பாளர் விஜய பிரபாகரனை ஆதரித்து அவரது சகோதரர் சண்முக பாண்டியன் வாக்கு சேகரித்தார். விருதுநகர் தொகுதிக்குட்பட்ட சிவகாசி பகுதியில் உள்ள பட்டாசு தொழிற்சாலைக்கு சென்ற அவர், அங்கு பணியாற்றுபவர்களிடம் ஆதரவு கேட்டார். தொழிலாளர்களுடன், தரையில் அமர்ந்து பேசிய அவர், இந்த முறை தனது அண்ணனுக்கு ஒரு வாய்ப்பை தாருங்கள் என வேண்டுகோள் விடுத்தார்.
Similar News
News August 15, 2025
ஏன் ரோஹித் வெற்றிகரமான கேப்டன்?

கிரிக்கெட்டில் ரோஹித்தின் கேப்டன்சிக்கு தனித்தன்மை உண்டு. இந்நிலையில், ஏன் ரோஹித் சர்மா ஒரு வெற்றிகரமான கேப்டனாக ஜொலிக்கிறார் என்று புவனேஷ்வர் குமாரிடம் கேட்கப்பட்டது. அதற்கு, ரோஹித் ஒரு முதிர்ச்சியான கேப்டன் என்றார். ஒவ்வொரு வீரர்களின் பலத்தையும் புரிந்துகொண்டு, அவர்களை எவ்வாறு பயன்படுத்துவது என்று அவருக்கு நன்றாகத் தெரியும் எனக் குறிப்பிட்டார். ரோஹித் கேப்டன்சியில் மறக்க முடியாத மொமண்ட் எது?
News August 15, 2025
சுதந்திர தின உரை: PM மோடி புதிய சாதனை

79-வது சுதந்திர தினத்தையொட்டி செங்கோட்டையில் கொடியேற்றி வைத்த PM மோடி, நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். மோடியின் மிக நீண்ட சுதந்திர தின உரையாக இது அமைந்தது. தனது முதல் சுதந்திர தின உரையை 2014-ல் 65 நிமிடங்கள் பேசிய அவர், அதிகபட்சமாக கடந்த ஆண்டு 98 நிமிடங்கள் பேசியிருந்தார். தற்போது, அதையும் தாண்டி 105 நிமிடங்கள் தொடர்ச்சியாக உரையாற்றியுள்ளார். மோடியின் பேச்சில் உங்களை கவர்ந்த அம்சம் எது?
News August 15, 2025
கொடியேற்றத்தில் ஈர்க்கும் இந்த ஜீப்பின் வரலாறு தெரியுமா?

டெல்லி செங்கோட்டையில் சுதந்திர தின கொடியேற்றத்தின் போது, முன்வரிசையில் இருக்கும் இந்த ஜீப்புக்கு தனி சிறப்பு உள்ளது. 1965-ல் பூட்டான் மன்னர் Jigme Dorji Wangchuck, அப்போதைய இந்திய ஜனாதிபதி சர்வபள்ளி ராதாகிருஷ்ணனுக்கு சுதந்திர தினத்தை முன்னிட்டு, இந்த ஜீப்பை பரிசாக அளித்துள்ளார். 2000-ம் ஆண்டில், இந்த ஜீப் அதிகாரப்பூர்வமாக இந்திய ராணுவத்திற்கு மாற்றப்பட்டு நாட்டின் சொத்தாக மாறியது.