News October 13, 2025
Bussiness Roundup: H1B விசாக்களை குறைக்கும் TCS

*செப்டம்பரில் இந்தியாவின் வர்த்தக பற்றாக்குறை இரண்டரை லட்சம் கோடியாகி உள்ளதாக யூனியன் வங்கி தெரிவித்துள்ளது. *2030-க்குள் தனது பெண் பணியாளர்கள் விகிதத்தை 30% ஆக உயர்த்த SBI திட்டமிட்டுள்ளது. *H1B விசா தேவைகளை குறைத்து, உள்ளூர் அமெரிக்கர்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளதாக TCS தெரிவித்துள்ளது. *2024-25 நிதியாண்டில் நாட்டின் சர்க்கரை ஏற்றுமதி 7.75 லட்சம் டன்னாக இருந்துள்ளது.
Similar News
News October 13, 2025
BREAKING: கரூர் துயர வழக்கில் பரபரப்பு தீர்ப்பு

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த வழக்கை சிபிஐ விசாரிக்கலாம் என்று SC தீர்ப்பளித்துள்ளது. கரூர் வழக்கை விசாரிக்க ஐஜி அஸ்ரா கர்க் தலைமையில் SIT குழுவை அமைத்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்குகளில் இந்த அதிரடி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
News October 13, 2025
ப.சிதம்பரம் கருத்தால் காங்கிரஸ் தலைமை அதிருப்தி

ஆபரேஷன் ப்ளு ஸ்டாரை பற்றிய ப.சிதம்பரம் கருத்தால் காங்கிரஸ் மேலிடம் அதிருப்தி அடைந்துள்ளது. கட்சியின் முக்கியமான தலைவராக இருக்கும் தாங்கள், இக்கருத்தை தவிர்த்திருக்க வேண்டும் எனவும், பொதுவெளியில் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்றும் தலைமை அறிவுறுத்தியுள்ளதாம். ஆபரேஷன் ப்ளு ஸ்டாரை இந்திராகாந்தி நடத்தியது தவறு என்றும், அதனால்தான் அவரது உயிர் போய்விட்டது எனவும் ப.சிதம்பரம் நேற்று பேசியிருந்தார்.
News October 13, 2025
மழை பெய்யுமா? பின்கோடு தெரிந்தால் போதும்

பின்கோடை உள்ளிட்டால் வானிலை நிலவரத்தை அறிய மத்திய அரசின் ‘<