News October 13, 2025

சற்றுநேரத்தில் தமிழ்நாடு எதிர்பார்க்கும் தீர்ப்பு

image

கரூர் கூட்டநெரிசல் பலி விவகாரத்தில் இன்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்க உள்ளது. CBI விசாரணைக்கு உத்தரவிடப்படுமா என்பதை தவெகவினர் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். தீர்ப்பு வெளியான பின்னரே விஜய்யின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள், பிரசாரம் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. முன்னதாக, இந்த விவகாரத்தில் ஐகோர்ட், நடைமுறைகளை முறையாக பின்பற்றப்படவில்லை என சுப்ரீம் கோர்ட் கருத்து தெரிவித்து இருந்தது.

Similar News

News March 5, 2026

வானதி சீனிவாசனுக்கு சீட் மறுக்கப்படுகிறதா?

image

பாஜகவில் சிட்டிங் MLA உள்பட முக்கியமான சிலருக்கு இம்முறை தேர்தலில் போட்டியிட சீட் மறுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, வானதி சீனிவாசன், வினோஜ் பி.செல்வம், கருப்பு முருகானந்தம் உள்ளிட்டோருக்கு சீட் கிடைக்காது என்று விமர்சகர்கள் கூறுகின்றனர். அதேநேரம், இளைஞர்கள் & புதுமுகங்களுக்கு வாய்ப்பளிக்க பாஜக திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

News March 5, 2026

மக்களுக்கு காவல்துறை வெளியிட்ட அவசர எச்சரிக்கை!

image

தெரியாதவர்களிடம் ஆன்லைனில் பழக வேண்டாம் என தமிழ்நாடு காவல்துறை மக்களை எச்சரித்துள்ளது. காதல் வலையை வீசி உங்களை ஹனி ட்ராப்பில் சிக்க வைக்கலாம் என சுட்டிக்காட்டி, ஆன்லைனில் தெரியாதவர்களிடம் பர்சனல் போட்டோவை பகிர்வதையும், வீடியோ காலில் பேசுவதையும் கண்டிப்பாக தவிர்க்கவும் வலியுறுத்தியுள்ளது. மேலும், ஏமாற்றமடைந்தவர்கள் ‘1930’ என்ற அவசர எண்ணில் உதவி கோரவும் தெரிவித்துள்ளது. SHARE IT.

News March 5, 2026

அஜித் குமார் மரணம்.. திடுக்கிடும் புதிய தகவல்

image

அஜித் குமார் கொலை வழக்கில், நிகிதா முதன்முறையாக விளக்கம் அளித்துள்ளார். அஜித் குமாரிடம் போலீஸ் விசாரித்தது பற்றி தனக்கு எதுவும் தெரியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். நகை காணாமல் போனதாக புகாரளித்த பிறகு, மடப்புரத்தில் இருந்து தான் கிளம்பிவிட்டதாக கூறிய நிகிதா, தனது புகாரில் உண்மை இல்லை என CBI கூறவில்லை; ஆதாரம் இல்லை என்றுதான் தெரிவித்துள்ளது என்றும் விளக்கம் அளித்துள்ளார்.

error: Content is protected !!