News April 16, 2024

RCB மிஸ் செய்த இடங்கள்

image

நேற்று SRH-க்கு எதிரான போட்டியில் கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய RCB போராடி 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. தொடக்க ஆட்டக்காரர்களான கோலி – டு பிளெசிஸ் கூடுதலாக 2 ஓவர்கள் விளையாடி ஓரளவுக்கு ரன்களை குவித்திருந்தால் அல்லது மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் யாராவது ஒருவர் சிறப்பாக விளையாடி இருந்தால் போட்டி RCB பக்கம் திரும்பி இருக்கலாம். அந்த அணி பந்துவீச்சிலும் கவனம் செலுத்தி இருக்க வேண்டும்.

Similar News

News November 15, 2025

நோட்டாவுடன் போட்டியிட்ட பிரசாந்த் கிஷோர் கட்சி

image

முதல் முறையாக தேர்தல் களம் கண்ட தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி(JSP), பிஹாரில் படுதோல்வி அடைந்துள்ளது. 238 தொகுதிகளில் போட்டியிட்ட JSP பெரும்பாலான இடங்களில் டெபாஸிட்டை இழந்துள்ளது. அக்கட்சி மொத்தமாக 3.44% வாக்குகளையே பெற்றுள்ளது. அதோடு 68 தொகுதிகளில் நோட்டாவை விட குறைவான வாக்குகளே JSP-க்கு கிடைத்துள்ளது. அரசியலில் புதிய கட்சிகளுக்கு இடமில்லையா?

News November 15, 2025

ராசி பலன்கள் (15.11.2025)

image

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். மேலே இருக்கும் போட்டோஸை SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.

News November 15, 2025

செண்பகப் பூவாய் சிவப்பு சேலையில் ருஹானி

image

கடைசி பென்ச் கார்த்தி படத்தின் மூலம் அறிமுகமான ருஹானி ஷர்மா, அதன்பின் தெலுங்கு, மலையாளம் மொழிகளில் நடித்து வந்தார். கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் தமிழில் நடித்துள்ளார். ‘மாஸ்க்’ திரைப்படம், வரும் நவம்பர் 21ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்நிலையில், இவர் இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள போட்டோக்களுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது. உங்களுக்கும் பிடிச்சிருந்தா, ஒரு லைக் போடுங்க.

error: Content is protected !!