News October 13, 2025
‘பாகுபலி 1’ வாழ்நாள் வசூலை முந்திய ‘காந்தாரா சாப்டர் 1’

‘காந்தாரா சாப்டர் 1’ படம் உலகம் முழுவதும் ₹590 கோடி வசூல் செய்துள்ள நிலையில், இந்தியாவில் மட்டும் ₹435.59 கோடி நிகர வசூலை ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம், ‘பாகுபலி 1’ மற்றும் ‘சலார்’ படங்களின் வாழ்நாள் நிகர வசூலை அப்படம் முந்தியுள்ளது. ‘பாகுபலி 1’ படம் இந்தியாவில் ₹420 கோடியும், ‘சலார் 1’ படம் ₹406.45 கோடியும் நிகர வசூலாக ஈட்டியது குறிப்பிடத்தக்கது.
Similar News
News October 13, 2025
BREAKING: தங்கம் விலை புதிய RECORD.. இதுவே முதல்முறை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(அக்.13) சவரனுக்கு ₹200 அதிகரித்துள்ளது. இதனால், 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹11,525-க்கும், சவரன் ₹92,200-க்கும் விற்பனையாகிறது. இதனால், வரலாறு காணாத வகையில் தங்கம் புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
News October 13, 2025
No Bra Day: பிரா அணியாமல் இருந்தால் என்ன ஆகும்?

உடல் பருமன், உணவு பழக்கம் உள்ளிட்ட பல காரணங்களால் பெண்களுக்கு அதிகமாக ‘மார்பக புற்றுநோய்’ ஏற்படுகிறது. அக்டோபர் மாதம் முழுவதும் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மேற்கொள்ளப்படும் நிலையில், இன்று (அக்.13) ‘No Bra Day’ கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளின் நோக்கம் என்ன, தவறான முறையில் Bra அணியாமல் இருந்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று மேலே swipe செய்து பாருங்கள். ஷேர் பண்ணுங்க.
News October 13, 2025
BREAKING: விஜய்க்கு கடைசி நேரத்தில் வந்த சிக்கல்

கரூரில் 41 பேர் பலியான வழக்கில், CBI விசாரணை கோரி தாங்கள் SC-ல் மனு தாக்கல் செய்யவில்லை என பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் புதிய மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். மகனை இழந்த பன்னீர்செல்வம், மனைவியை இழந்த செல்வராஜ், சகோதரியை இழந்த பிரபாகர் ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டை நாடியுள்ளனர். CBI விசாரணை கோரிய வழக்கில் 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கவுள்ள நிலையில், கடைசி நேரத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.