News April 16, 2024
பாஜக தலைவர் ஓபிஎஸ்; கிண்டலடித்த ஜெயக்குமார்

தேர்தலுக்கு பிறகு அண்ணாமலை பாஜகவில் இருந்து காணாமல் போய்விடுவார் என ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலுக்கு பிறகு பாஜகவின் தலைவராக ஓபிஎஸ், பொதுச்செயலாளராக டிடிவி தினகரன் வருவார்கள். அதிமுகவில் இடமில்லாத நிலையில் பாஜக தான் அவர்களின் சாய்ஸ் ஆக இருக்கும் என்ற அவர், அண்ணாமலையின் கதையை தேர்தலுக்கு பிறகு பாஜக முடித்து வெளியே அனுப்புவார்கள் என்றும் தெரிவித்தார்.
Similar News
News January 22, 2026
கிரீன்லாந்தை கைப்பற்ற துடிக்கும் டிரம்ப்

உலக பொருளாதார மன்றத்தில் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், கிரீன்லாந்து நாட்டை கைப்பற்றும் தனது முயற்சி குறித்து பேசினார். கிரீன்லாந்து ஒரு பனிக்கட்டி துண்டு என்று குறிப்பிட்ட அவர், அதை கைப்பற்ற தான் பலத்தை பயன்படுத்தவில்லை என்று மறைமுகமாக அச்சுறுத்தினார். மேலும், கிரீன்லாந்தை பாதுகாக்கும் திறன் அமெரிக்காவைத் தவிர வேறு எந்த நாட்டிற்கும் இல்லை என்று கூறினார்.
News January 22, 2026
இந்திய வீரர் காயம்

நியூசி.,க்கு எதிரான முதல் T20 போட்டியில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அக்சர் படேல் காயமடைந்தார். 16-வது ஓவரில் அவர் வீசிய பந்தை மிட்செல் வேகமாக விளாச, அதை பிடிக்க கையை நீட்டினார். ஆனால், பந்து கையின் நுனியில் பட்டு பவுண்டரிக்கு சென்றது. இதில், அவரது கையில் ரத்தம் வந்து, வலி தாங்க முடியாமல் மைதானத்தை விட்டு வெளியேறினார். காயத்தால் அடுத்த போட்டியில் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
News January 22, 2026
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: ஒற்றாடல் ▶குறள் எண்: 588 ▶குறள்: ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர்
ஒற்றினால் ஒற்றிக் கொளல். ▶பொருள்: ஓர் உளவாளி, தனது திறமையினால் அறிந்து சொல்லும் செய்தியை, மற்றோரு உளவாளி கொண்டு வந்த செய்தியுடன் ஒப்பிட்டுப் பார்த்த பிறகே அது, உண்மையா இல்லையா என்ற முடிவுக்கு வரவேண்டும்.


