News October 13, 2025
International Roundup: இஸ்ரேல் பணயக் கைதிகள் விடுவிப்பு

*காசா அமைதி உடன்படிக்கை எகிப்தில் இன்று கையெழுத்தாக உள்ளது. *மடகாஸ்கரில் போராட்டக்காரர்களுடன் இணைந்து ராணுவம் ஆட்சியை கைப்பற்ற முயற்சிப்பதாக அந்நாட்டு அதிபர் ஆண்ட்ரி ரஜோலினா தெரிவித்துள்ளார். *தங்கள் வசம் உள்ள மொத்த இஸ்ரேல் பணயக் கைதிகளையும் ஹமாஸ் இன்று விடுவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. *மெக்சிகோ வெள்ளத்தில் 44 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
Similar News
News October 13, 2025
வாரிசு நடிகர் என்ற பெயரை போக்க முயற்சிப்பேன்: துருவ்

தந்தையை நடிப்பு ரீதியாக தோற்கடிக்க முயற்சிப்பேன் என துருவ் விக்ரம் தெரிவித்துள்ளார். ‘பைசன்’ ஷூட்டிங்கில் காயம்பட்டதை விக்ரமிடம் சொன்னபோது, சினிமாவில் இதை பழகிக்கொண்டால் முன்னேறலாம் என்று கூறியதாகவும் அவர் நினைவுகூர்ந்துள்ளார். மேலும், வாரிசு நடிகர் என்ற விமர்சனங்களை முறியடிப்பதற்காகவும், தன்னை அடையாளப்படுத்தி கொள்ளவும், இந்த வலி மிகுந்த பயணத்தில் தொடர்ந்து பயணிப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.
News October 13, 2025
Bussiness Roundup: H1B விசாக்களை குறைக்கும் TCS

*செப்டம்பரில் இந்தியாவின் வர்த்தக பற்றாக்குறை இரண்டரை லட்சம் கோடியாகி உள்ளதாக யூனியன் வங்கி தெரிவித்துள்ளது. *2030-க்குள் தனது பெண் பணியாளர்கள் விகிதத்தை 30% ஆக உயர்த்த SBI திட்டமிட்டுள்ளது. *H1B விசா தேவைகளை குறைத்து, உள்ளூர் அமெரிக்கர்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளதாக TCS தெரிவித்துள்ளது. *2024-25 நிதியாண்டில் நாட்டின் சர்க்கரை ஏற்றுமதி 7.75 லட்சம் டன்னாக இருந்துள்ளது.
News October 13, 2025
அதிகாலையில் நடைப்பயிற்சி செய்யுங்கள்!

தினமும் அதிகாலையில் எழுந்ததும் நடைப்பயிற்சி செய்வது பல்வேறு வகைகளில் பலன் தரும்.
* உடலின் ஆற்றல் அதிகரிக்கும்.
* மனநிலையை மேம்படுத்தும்.
* எடையை குறைக்க உதவும்.
* தசைகளை பலப்படுத்தும்.
* தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தும்.
* நோயெதிர்ப்பு செயல்பாடுகளை அதிகரிக்கும்.