News April 16, 2024
‘குட் பேட் அக்லி’ படத்தில் அஜித்துக்கு வில்லன் யார்?

‘குட் பேட் அக்லி’ படத்தில், அஜித்துக்கு வில்லனாக யார் நடிப்பது? என்பது குறித்த சுவாரஸ்ய தகவல் இணையத்தில் கசிந்துள்ளது. அதன்படி, ‘அனிமல்’ படத்தில் வில்லனாக நடித்த பாபி தியோல் மற்றும் பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாமிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சூர்யாவின் கங்குவா படத்தில் பாபி தியோல் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Similar News
News April 9, 2026
திருப்பத்தூர் : 9445030725 இந்த நம்பரை SAVE பண்ணிக்கோங்க!

திருப்பத்தூர் மக்களே அவசர கால 108 ஆம்புலன்ஸ் சேவை இனி Whatsapp மூலமாக பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 9445030725 என்ற எண்ணை சேமித்து ‘Hi’ என அனுப்பவும். பிறகு Book Ambulance-ஐ தேர்வு செய்து send Location என கிளிக் செய்து Location-னை பகிரவும். கட்டுப்பாட்டு மையம் தொடர்புகொண்டு ஆம்புலன்ஸ் தகவலை வழங்கும். உயிருக்கு போராடும் நேரத்தில், லொகேஷன் தெரியாமல் அலைய வேண்டிய தேவையே இருக்காது. ஷேர்!
News April 9, 2026
ஆர்வமுடன் வாக்களிக்கும் GEN Z தலைமுறை

புதுச்சேரி, கேரளா, அசாம் ஆகிய மாநிலங்களில் நடைபெறும் சட்டப்பேரவை தேர்தல்களில் முதல் முறை வாக்காளர்கள்(GEN Z ) ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். வாக்களித்த பிறகு வாக்குச்சாவடிகளில் அமைக்கப்பட்டிருந்த GEN Z செஃல்பி பாயிண்டில் அவர்கள் போட்டோ எடுத்துக் கொண்டனர். அதேபோல கேரளாவில் முதல் முறை வாக்காளர்களுக்கு அல்வா வழங்கப்பட்டது.
News April 9, 2026
BREAKING: சம்பளம் உயர்கிறது.. வந்தாச்சு HAPPY NEWS

தேசிய கவுன்சிலின் வரைவுக் குழுக் கூட்டம் ஏப்.13-ம் தேதி நடைபெறவுள்ளது. இதில், 8-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை இறுதி செய்யவுள்ளனர். இது மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாகும். Fitment Factor 2.57 ஆக இருந்தால், ஊழியர்களுக்கு 30% – 34% வரை சம்பள உயர்வு கிடைக்கும். உதாரணமாக, ₹18,000 சம்பளத்திற்கு Fitment Factor 2.57 ஆக இருந்தால், ₹46,000-க்கு மேல் அதிகரிக்கும். SHARE


