News April 16, 2024
ராகுல் ஒருமுறை வருவது, மோடி 10 முறை வருவதற்கு சமம்

வரலாறு மீண்டும் திரும்பும்; மன்மோகன் சிங் போன்ற ஒரு பிரதமர் நாட்டுக்கு கிடைப்பார் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பாஜகவின் சித்தாந்தம் தமிழ்நாட்டு மக்களின் எண்ணங்களுக்கு எதிராக உள்ளதால், அது இங்கு எடுபடவில்லை. இதனால் மோடி, அமித்ஷாவின் ரோடு ஷோ தோல்வியில் முடிந்தது என விமர்சித்த அவர், ராகுல் தமிழ்நாட்டுக்கு ஒருமுறை வருவது, மோடி 10 முறை வருவதற்கு சமம் எனத் தெரிவித்தார்.
Similar News
News January 26, 2026
தேர்தலை குறிவைத்து பத்ம விருதுகள்: கார்த்தி சிதம்பரம்

இந்தாண்டுக்கான பத்மவிருதுகளை மத்திய அரசு அறிவித்த நிலையில் அதனை காங்., MP கார்த்தி சிதம்பரம் விமர்சித்துள்ளார். தனது X-ல் அவர், ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற முறை இருந்திருந்தால், பத்மவிருது பெறுபவர்களைத் தேர்ந்தெடுப்பது அரசுக்கு மிகவும் சிக்கலானதாக இருந்திருக்கும் என்றும், ஆனால் இப்போது அது மிகவும் எளிது; தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களைச் சேர்ந்தவர்களைத் தேர்ந்தெடுத்தால் போதும் எனவும் கூறியுள்ளார்.
News January 26, 2026
ஒரு யூனிட் மின்சாரம் ₹3.50-க்கு கிடைக்க வாய்ப்பு!

மகாராஷ்டிராவில் 2 தோரியம் அடிப்படையிலான மின் நிலையங்களை மத்திய அரசு அமைக்க உள்ளது. உலகளவில் யுரேனியம் மூலம் அதிக மின்சாரம் பெறப்படும் நிலையில், தோரியம் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வது சுற்றுச்சூழலை பாதுகாக்க உதவும். மேலும் ஒரு யூனிட்டுக்கு ₹3.50 என்ற குறைந்த விலையில் மின்சாரம் இனி கிடைக்கும். TN-ல் தற்போது பயன்பாட்டை பொறுத்து ஒரு யூனிட்டுக்கு ₹4.95 – ₹12 வரை கட்டணம் விதிக்கப்படுகிறது.
News January 26, 2026
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: ஊக்கமுடைமை ▶குறள் எண்: 592 ▶குறள்: உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை நில்லாது நீங்கி விடும். ▶பொருள்: ஊக்கம் எனும் ஒரு பொருளைத் தவிர, வேறு எதனையும் நிலையான உடைமை என்று கூற இயலாது.


