News October 13, 2025
விருதுகளில் கஜோலின் சாதனையை தகர்த்த ஆலியாபட்

‘ஜிக்ரா’ படத்துக்கு பிலிம் ஃபேர் விருது வாங்கியதன் மூலம் இந்த விருதை அதிக முறை (6) பெற்ற நடிகை என்ற பெருமையை ஆலியாபட் பெற்றுள்ளார். மறைந்த நடிகை நூதன் மற்றும் கஜோல் ஆகியோர் 5 பிலிம் ஃபேர் விருதுகளை வென்றுள்ளனர். ஆலியா பட் இதற்கு முன் உட்டா பஞ்சாப், ராஸி, கங்குபாய் கதியாவாடி, கல்லி பாய், ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி உள்ளிட்ட படங்களுக்காக விருதுகளை பெற்றிருந்தார்.
Similar News
News October 13, 2025
பாக். – ஆப்கன் மோதல்: ஒன்று சேர்ந்த இஸ்லாமிய நாடுகள்

பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் இடையேயான உறவை மேம்படுத்த இஸ்லாமிய நாடுகள் முன் வந்துள்ளன. இந்த விவகாரத்தை பேசி தீர்க்க வேண்டும் என சவுதி, ஈரான், கத்தார் ஆகிய நாடுகள் தெரிவித்துள்ளன. அதேபோல், இருநாடுகளுக்கு இடையே மத்தியஸ்தம் செய்ய முன் வருவதாக ஈரான் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகள் முகாம்கள் இருந்ததாக கூறி பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதால், இருநாடுகளுக்கு இடையே சண்டை மூண்டது.
News October 13, 2025
அக்டோபர் 13: வரலாற்றில் இன்று

*பன்னாட்டு இயற்கை பேரிடர் குறைப்பு நாள். *1792 – வெள்ளை மாளிகைக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. *1884 – சர்வதேச நேரம் கணிக்கும் இடமாக லண்டனில் உள்ள கிரீன்விச் தெரிவு செய்யப்பட்டது. *1923 – துருக்கியின் தலைநகர் இஸ்தான்புல் இலிருந்து அங்காராவுக்கு மாற்றப்பட்டது. *1956- தமிழ்நாடு என பெயர் வைக்க போராடி உயிர்நீத்த சங்கரலிங்கனார் இறந்த நாள். *1990 – தென்னிந்தியத் திரைப்பட நடிகை பூஜா ஹெக்டே பிறந்தநாள்.
News October 13, 2025
‘பாகுபலி 1’ வாழ்நாள் வசூலை முந்திய ‘காந்தாரா சாப்டர் 1’

‘காந்தாரா சாப்டர் 1’ படம் உலகம் முழுவதும் ₹590 கோடி வசூல் செய்துள்ள நிலையில், இந்தியாவில் மட்டும் ₹435.59 கோடி நிகர வசூலை ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம், ‘பாகுபலி 1’ மற்றும் ‘சலார்’ படங்களின் வாழ்நாள் நிகர வசூலை அப்படம் முந்தியுள்ளது. ‘பாகுபலி 1’ படம் இந்தியாவில் ₹420 கோடியும், ‘சலார் 1’ படம் ₹406.45 கோடியும் நிகர வசூலாக ஈட்டியது குறிப்பிடத்தக்கது.