News October 12, 2025
மீண்டும் வந்த ‘La Nina’: குளிரில் நடுங்க போகும் இந்தியா!

பசிபிக் கடலின் நடுப்பகுதி வழக்கத்தை விட மிகவும் குளிர்ந்து போவதை தான் La Nina என்கிறார்கள். இது உலகம் முழுவதும் காலநிலையில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும். இந்த La Nina காரணமாக இந்தியாவின் பல பகுதிகளில், குறிப்பாக வட மாநிலங்களில் குளிர் காலம் வழக்கத்தை விட கடுமையாக இருக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். கடும் பனிபொழிவோடு, Cold Waves வீசக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
Similar News
News October 13, 2025
அமெரிக்கா இதை செய்தால் அணு ஆயுத போர்தான்: ரஷ்யா

Tomahawks ஏவுகணைகளை உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கினால், அது போரை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் என ரஷ்யா எச்சரித்துள்ளது. அணு ஆயுத போருக்கு வழிவகுக்கும் என்றும் தெரிவித்துள்ளார். முன்னதாக, இந்த ஏவுகணைகளை வழங்குவது அமெரிக்கா போரில் நேரடியாக ஈடுபடுவதாகவே கருதப்படும் என ரஷ்ய அதிபர் புடினும் தெரிவித்து இருந்தார். 2,500 கிமீ செல்லும் இந்த ஏவுகணைகளால் ரஷ்யாவின் ஆற்றல் மையங்களை தகர்க்க முடியும்.
News October 13, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: காலமறிதல் ▶குறள் எண்: 487 ▶குறள்: பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து உள்வேர்ப்பர் ஒள்ளி யவர். ▶பொருள்: பகையை வீழ்த்திட அகத்தில் சினங்கொண்டாலும் அதனை வெளிப்படுத்தாமல் இடம் காலம் இரண்டுக்கும் காத்திருப்பதே அறிவுடையார் செயல்.
News October 13, 2025
தீபாவளி ட்ரீட் கொடுக்கும் ‘கருப்பு’

‘கருப்பு’ படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய எவ்வளவோ முயற்சித்தும் முடியவில்லை என அப்படத்தின் இயக்குநர் ஆர்ஜே பாலாஜி தெரிவித்துள்ளார். இன்னும் கிராஃபிக்ஸ் பணிகள் நிறைவு பெறவில்லை எனவும், தீபாவளிக்கு முதல் பாடல் வெளியாகும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், படம் நன்றாக வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். நீண்ட இடைவேளைக்கு பிறகு இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார்.