News October 12, 2025
எதிர்க்கட்சிகள் உதிரியாகி விடக்கூடாது: தமிழிசை

எதிர்க்கட்சிகள் உதிரியாக இல்லாமல் உறுதியாக இருக்க வேண்டும் என்று தமிழிசை செளந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார். திமுக எதிர்ப்பு வாக்குகள் பிரிந்துவிடக் கூடாது என்ற அவர், இதற்கு ஏற்ப எதிர்க்கட்சிகள் உறுதியாக இருக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். இதை புரிந்துகொள்ள வேண்டியது விஜய்யின் கடமை என கூறிய தமிழிசை, இது OPS, TTV-க்கும் பொருந்தும் என்றார்.
Similar News
News March 15, 2026
மேற்கு வங்கத்தில் 2 கட்டங்களாக தேர்தல்

294 தொகுதிகள் கொண்ட மேற்கு வங்கத்தில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்ட வாக்குப்பதிவு ஏப்.23-ம் தேதியும், 2-ம் கட்ட வாக்குப்பதிவு ஏப்.29-ம் தேதியும் நடைபெறவுள்ளது. மே.4-ல் வாக்கு எண்ணிக்கை நடக்கும்.
News March 15, 2026
தேர்தலில் முதல்முறையாக வரப்போகும் அதிரடி மாற்றம்

5 மாநில தேர்தல் தொடர்பாக CEC ஞானேஷ் குமார் முக்கியமான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதன்படி, முதல்முறையாக வாக்கு இயந்திரத்தில் வேட்பாளர்களின் படம் மற்றும் சின்னம் கருப்பு வெள்ளையாக இல்லாமல் வண்ணத்தில் இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2 மணி நேரத்திற்கு ஒருமுறை வாக்குப்பதிவு நிலவரம் வெளியிடப்படும் எனவும் அனைத்து BLO-க்களுக்கும் அடையாள அட்டை வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
News March 15, 2026
புதுச்சேரியில் ஏப்.9-ல் சட்டப்பேரவை தேர்தல்

புதுச்சேரியில் ஏப்ரல் 9-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் என CEC ஞானேஷ் குமார் அறிவித்துள்ளார். ஒரே கட்டமாக 30 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.


